web log free
March 15, 2025

செனஹச டாத்" தன்னுடைய அர்ப்பணிப்பினைத்தொடரும் லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்

புகழ்பெற்ற மெக் கரி வாசனைத்திரவிய வர்த்தகநாமத்திற்குபின்னிருக்கும் கம்பெனியான, லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்டானது 'செனஹச டாத்" துவக்கத்தின் ஊடாகசமுதாய முன்னேற்றத்திற்கான தன்னுடையஅர்ப்பணிப்பினைத் தொடருகின்றது. இம்முறை, அதன்மூன்றாவது துவக்கத்தில் கொட்டாவை, பன்னிபிட்டியவிலுள்ளமே/ஜா வித்தியாதன மஹா வித்தியாலயத்திலானகவனம்செலுத்தப்பட்டதுடன் அங்கு நூலகத்திற்கானநூல்களும் நூலக மேசைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

'செனஹச டாத்" துவக்கமானது, கல்விக்கான சமமானஅணுகலை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு, மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடனான பாடசாலைகளுக்குஆதரவளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டவொன்றாகும். இத்திறப்பாட்டின் தொடர்ச்சியாக, மே/ஜா வித்தியாதன மஹாவித்தியாலயமானது நன்மை பெறும் பாடசாலையாகத்தெரிவுசெய்யப்பட்டிருந்தது. லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்டின் பதில் பிரதம சந்தைப்படுத்தல்உத்தியோகத்தர், வருண கருணாரத்ன, அவர்கள்கருத்துதெரிவிக்கையில், 'வாசிப்பானது அறிவினைவளப்படுத்துவது மாத்திரமின்றி மேலும் நிறைவான வாழ்வைவாழவும் சமூகத்திற்கு நேர்க்கணியமாக பங்களிக்கவும்தனிநபர்களை வலுவூட்டுவதுமான உண்மையில்பெறுமதிமிக்கவொரு பழக்கமாகும். ஒரு சமூக பொறுப்புமிக்கநிறுவனமாக, லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்டாகிய நாம்எதிர்கால சந்ததியினரை வடிவமைப்பதிலான கல்வியின்பெறுமதியினை புரிந்துக்கொண்டுள்ளளோம்.' என்றார்.

வித்யாதன மஹா வித்தியாலயத்தின் அதிபர், கே.எம்.எஸ். சந்தன அவர்கள் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கையில்,'லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்டிடமிருந்தான இந்த ஆதரவுஎமது மாணவர்களிற்கானவொரு அரிய வாய்ப்பாகும். இதுஅவர்கள் பெறும் கல்வியின் தரத்தினை குறிப்பிடத்தக்களவில்அதிகரிக்கும் என்பதுடன், முன்னர் அடிப்படை வளங்களிற்குதேக்கமுற்றிருந்த சூழலில் வெற்றிபெறவும் அவர்களைஅனுமதிக்கும்.'

கம்பெனியின் நீண்டகால தூரநோக்குகளை பற்றிக்கூறுகையில், கருணாரத்ன அவர்கள், 'எம்முடையஅர்ப்பணிப்புக்களின் தொடர்ச்சியாக, இலங்கையின்பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கானஆதரவினை நாம் தொடருவோம். எம்முடைய 'செனஹச டாத்" துவக்கத்தின் ஊடாக, சமூக நலவாழ்வு மற்றும் சமுதாயநல்லிருப்புக்களினை நோக்கியதாக எம்முடைய முயற்சிகளைவிஸ்தரிக்க நாம் ோக்கங்கொண்டுள்ளோம். வாசிப்பதற்கும்கற்பதற்குமான விருப்பத்தினை வளர்ப்பதனால், மேலும்அறிவூட்டப்பெற்றதும் பொறுப்புமிக்கதுமான சமூகத்தைகட்டமைப்பதற்கு பங்களிக்க நாம் நம்பிக்கைக்கொண்டுள்ளோம்.' என்றார்.

லங்கா ஸ்பைஸானது நிலைபேண் கல்வி அபிவிருத்திகளின்மீது கவனம்செலுத்தும் முற்போக்கு சிந்தனைக்கொண்டசெயற்றிட்டங்களின் தொடரொன்றுடன் 'செனஹச டாத்" துவக்கத்தினை விரிவுபடுத்த தயாரகவுள்ளது. கைத்தொழிற்றுறை அறிவு மற்றும் அடிப்படை வாழ்க்கைமற்றும் தொழிற்றிறன்களை கட்டமைக்க மாணவர்களிற்குஉதவுவதற்காக பாடசாலைகளின் பங்காண்மையுடன், வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தவும்கம்பெனி திட்டமிட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, லங்கா ஸ்பைஸானது,இலங்கையில் உயர் தரத்திலான வாசனைத்திரவியங்கள்மற்றும் மூலிகைகளிற்கான மறுபெயராக, அதனுடைய மெக்கரி வர்த்தகநாமத்தின் ஊடாக வாசனைத்திரவி துறையில்தொடர்ந்தும் முன்னணிவகிக்கின்றது. 'செனஹஸ டாத்" துவக்கத்துடன், கல்வித் துறையிலும் இலங்கைஇளைஞர்களின் எதிர்காலத்திலும் நீடித்த தாக்கமொன்றைஏற்படுத்த கம்பெனி அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd