SDB வங்கியானது நாட்டில் 5 வருட நிலையான வைப்புகளுக்கு அதிகூடிய வட்டியினை வழங்கும் நிலையான வைப்பு பிரச்சாரத்தின் துவக்கத்தினை அறிவிப்பதில் பெருமை கொள்கின்றது. இப்பிரச்சாரமானது கவர்ச்சிகரமான வருமானங்களை மாத்திரமின்றி நம்பிக்கையுடன் உங்களது நிதி இலக்குகளை அடைவதற்கும் உதவுவதுடன் மேலும் பாதுகாப்பான, உயர் வருமான முதலீட்டு வாய்ப்புக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதிலும்கவனம்செலுத்துகின்றது.
இவ்விசேட பிரச்சார காலத்தின்போது உங்களது சேமிப்பும் ஸ்திரமாக வளருவதனை உறுதிப்படுத்துவதுடன் அனைத்து 5வருட நிலையான வைப்புகளுக்கும் ஆண்டுக்கு 9.75% மாதாந்த வட்டிவீதத்தினையும் 13% முதிர்வு வீதத்தினையும் வழங்குகின்றது. முதலீடுகளுக்கான இக்குறிப்பிடத்தக்க வருமானமானது சந்தைகளில் காணப்படும் பல முதலீடுகளை விட நிலையானதும் நீண்ட காலத்திற்குமான முதலீடுகளை எதிர்பார்ப்பவர்களுக்கான முன்னணி தேர்வாக வங்கியை நிலைநிறுத்துகின்றது. எதிர்காலத்திற்கான, அல்லது பிள்ளைகளின் படிப்பிற்கான, அல்லது சௌகரியமான ஓய்வுகாலத்திற்கான சேமிப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்நிலையான வைப்பு பிரச்சாரமானது எதிர்காலத்தின் சௌபாக்கியத்தினை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது.
SDB வங்கியின் பிரதம வியாபார அதிகாரியான, சித்ரால் டி சில்வா, அவர்கள், “எமது 5-வருட நிலையான வைப்பு பிரச்சாரமானது சந்தையில் அதிக உயர் வட்டி விகிதத்துடன் பாதுகாப்பானதும் பெறுமதியானதுமான முதலீட்டு வாய்ப்பினை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வடிவமைக்கப்பட்டதாகும் எனவும் எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது சேமிப்புக்களை வளர்க்கவும் அவர்களது நிதி இலக்குகளை அடைந்து கொள்ளவும் உதவும் எனவும் கவர்ச்சிகரமான விசேட அம்சங்களுடன் உயரிய வாடிக்கையாளர் சேவையினை வழங்க நாம் அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றோம் எனவும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள அருகிலுள்ள SDBவங்கிக் கிளைக்கு செல்லலாம் அல்லது 0115 411411 எனும் எமது 24-7 வாடிக்கையாளர் நிலையத்தினை தொடர்புகொள்ள முடியும்.” என்றார்.

சமுதாயங்கள், கூட்டுத்தாபனங்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் முன்னேற்றகரமான சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளில் ஈடுபடுவோர் மற்றும் தனிநபர்கள் என அனைவரையும் வலுவூட்டும் SDB வங்கியுடன் இலகுவாக நிலையான வைப்பு கணக்கொன்றினை ஆரம்பிப்பதன் மூலம் தேசிய அபிவிருத்தியில் முக்கிய கூறாக விளங்குவது உங்கள் இலக்காகலாம்.
SDB வங்கி:
வாடிக்கையாளர் மைய மற்றும் ஒவ்வொரு தனிநபரினதும் தேவைகளுக்கென நேர்த்தியாக்கப்பட்ட பொருத்தமான ஆதரவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட, எதிர்காலத்திற்கு தயாரான வங்கியொன்றாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதான பலகை மற்றும் BB +(lka) பிட்ச் ரேட்டிங்கிலான பட்டியலுடன், இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குப்படுத்தப்படுகின்ற அனுமதிப்பெற்ற விசேடத்துவப்படுத்தப்பட்ட வங்கியொன்றாகும். நாடளாவியரீதியில் 94 கிளை வலையமைப்பினூடாக, வங்கியானது நாடுமுழுதும் அதனது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வியாபார வங்கியியல் வாடிக்கையார்களிற்கு நிதிச் சேவைகளை பொருத்தமான வகைகளில் வழங்குகின்றது. நிலைபேறான நடைமுறைகளின் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள் மற்றும் வியாபாரங்களை உயர்த்தும் துடிப்பான குவிமையத்துடனான சுற்றுச்சூழல், சமூக, மற்றும் ஆட்சி கோட்பாடுகள் SDBவங்கியின் நெறிமுறைகளில் ஆழப்பதிந்துள்ளன. நாட்டை புதிய உயரத்திற்கு இட்டுச்செல்வதனை நோக்கமாகக்கொண்டு, மகளிரை வலுப்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் எண்ணிய உள்ளடக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


