web log free
April 01, 2025

HNB பொதுக் காப்புறுதிக்கு SLIM National Sales Awards 2024 இல் உயர் விருதுகள்

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஏற்பாடு செய்திருந்த தேசிய விற்பனை விருதுகள் 2024 (National Sales Awards 2024) இல் மதிப்புமிக்க மூன்று விருதுகளை HNB பொதுக் காப்புறுதி (HNBGI) நிறுவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் தனது விசேடத்துவத்தை நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் தொழில்துறைகளில் உள்ள விற்பனை நிபுணர்களை கௌரவிக்கும் இந்த சிறப்புமிக்க நிகழ்வானது, அவர்களுக்கான அங்கீகாரத்தின் உச்சமாகும்.

2023-2024 காலப் பகுதியில் HNBGI இன் ஒப்பிட முடியாத விற்பனை சாதனைகளைப் பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் Channel Development முகாமையாளர் தனிடு டி. கலப்பத்தி தேசிய விற்பனை முகாமையாளர் பிரிவின் கீழ் வெள்ளி விருதை வென்றார். தனிந்துவின் பன்முகத்துவம் வாய்ந்த பங்களிப்புகள் HNBGI இன் விற்பனை வெற்றிக்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. மேம்பட்ட செயல்திறனை அடைவதற்காக ஒரு மாற்றமடையும் விற்பனைக் குழுவை நிர்வகிக்கும் அவரது தலைமைத்துவமானது, புத்தாக்கமான தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் புதிய சந்தைப் பிரிவுகளுக்குள் நுழைவதற்காக தயாரிப்புகளை பல்வகைப்படுத்தல் மற்றும் தயாரிப்புகளை தொகுப்பாக வழங்குதல் போன்ற உத்திகளை கொண்டிருந்தது.

HNBGI மாலபே கிளை முகாமையாளர் புலஸ்தி பண்டார பிராந்திய முகாமையாளர் பிரிவில், தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். விற்பனை இலக்குகளை அடைவதிலும் சிறந்த நடைமுறைகளை முன்னெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் அவரது மூலோபாய திட்டமிடல் திறன்கள், நிதி சார்ந்த புத்திசாலித்தனம், வலுவான தொடர்பாடல் திறன்கள் ஆகியவற்றின் மூலம் அவர் இந்த விருதை பெற்றுள்ளார்.

இதே பிரிவில், HNBGI கொழும்பு தெற்கு பிரிவின் Cluster முகாமையாளர் ரங்க தேஷான், கிளைச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதிலான அவரது திறமைக்காக மெரிட் விருதை வென்றார். அவரது கிளை-நிலை ரீதியிலான உத்தி, இலக்குகளை அடையும் சாதனை மற்றும் குழு மேம்பாடு ஆகியவற்றில் கொண்டுள்ள நிபுணத்துவம் ஆகியன, HNBGI இன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றது.

தங்களது விற்பனைக் குழுவின் சாதனைகள் தொடர்பில் தனது பெருமிதத்தை வெளிப்படுத்தி கருத்து வெளியிட்ட, HNBGI இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சித்துமின ஜயசுந்தர, "கடந்த சில வருடங்களில் நாம் அடைந்துள்ள உறுதியான விற்பனை வளர்ச்சியானது, எமது விற்பனைக் குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான செயற்பாட்டிற்கான சான்றாகும். தங்களது கடின உழைப்புக்காக அவர்கள் உள்ளக ரீதியில் அங்கீகாரமளிக்கப்படுவதை HNBGI ஆகிய நாம் உறுதி செய்கிறோம். ஆயினும் தேசிய மேடையில் அவர்களுக்கு வழங்கப்படும் இவ்வாறான கௌரவத்தை காண்பது நம்பமுடியாத வெகுமதியென கருதுகிறோம். நிறுவனத்திற்காக சிறந்த பங்களிப்பை வழங்கியமை தொடர்பில் விருது வென்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

இந்த பாராட்டுகள் HNBGI இன் விற்பனைப் படையினரின் விசேடத்துவம், புத்தாக்கம், தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகிய விடயங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. SLIM National Sales Awards 2024 இல் கிடைத்த இந்த அங்கீகாரமானது, இத்துறையில் முன்னணியில் உள்ள HNBGI இன் நிலையை, ஆர்வமுள்ள மற்றும் உயர் செயல்திறன் கொண்ட குழுவினரினால் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd