web log free
April 01, 2025

இலங்கை கட்டிடக்கலை நிறுவக விருது 2025 இல் பெரிய வெற்றிகளைப் பெற்ற ஏசியன் பெயின்ட்ஸ்  கோஸ்வே

பெயின்ட்ஸ் குழுமத்தின் ஒரு பங்குதாரருமான ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயானது இலங்கை கட்டிடக்கலை நிறுவகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு சமீபத்தில் நிறைவுற்ற இலங்கை கட்டிடக்கலை விருதுகள் 2025 இல் உயர் விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளது. உள்ளுர் அல்லது இறக்குமதிப் பொருட்களை பயன்படுத்தும் உள்ளுரில் உற்பத்திசெய்யப்பட்ட உற்பத்திகளை அங்கீகரிக்கும் வருடாந்த உற்பத்தி விருதுகள் 2025 வெற்றியாளராக கம்பெனி தோற்றம்பெற்றுள்ளது.

ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயின் ஈரப்பதன் மற்றும் கடுமையான காலநிலைகளிலிருந்து வெளிப்புறச் சுவர்களை பாதுகாக்கும் புரட்சிகரமான முன்னணி நீர்ப்புகா பாதுகாப்பு பெயின்டான ஸ்மார்ட்கெயார் அக்யூவா சேப், மதிப்புமிக்க 'எக்ஸலன்ஸ் விருதினை" எனும் விருதினால் கௌரவிக்கப்பட்டதுடன், ஒப்பற்ற வெடிப்புக்களை பிணைக்கும் இயலுமையும் மற்றும் சுவர்களை ஈரப்பதத்திலிருந்து பாதுகாப்பதுமான ஸ்மார்ட்கெயார் டம்ப் சீல் 'மெரிட்" எனும் விருதினை வென்றது.

இச்சாதனைகள் குறித்து கருத்துதெரிவித்த, ஏசியன் பெயின்ட்ஸ் இன்டர்நேஷல் தனி. நிறுவனத்தின் பிராந்திய தலைவர், சிரேஷ் ராவ் அவர்கள், 'ளுடுஐயு விருதுகள் என்பது நாட்டின் அனைத்து பட்டய கட்டிடக்கலைஞர்களினதும் பிரதிநிதிகளினால் ஒழுங்கமைக்கப்படுகின்ற, கட்டிடக்கலைத் துறையின் மதிப்புமிக்க அங்கீகாரம் ஆகும். இலங்கை பெயிண்ட் சந்தையில் தலைமை வகிப்பதும், உள்ளுர் அறிவுடன் சர்வதேச   R&D மற்றும் தொழிநுட்ப நிபுணத்துவத்தினை இணைப்பதில் நன்கறியப்பட்டவர்களுமான, நாம், கட்டுமானத்துறையில்எப்பொழுதும் முன்னணி வகிக்கின்றோம். இப்பெருமதிப்புமிக்க மேடையில் எம்முடைய இரண்டு புத்தாக்க உற்பத்திகள் அங்கீகரிக்கப்பட்டமையானது சிறந்து விளங்குவதற்கான எம்முடைய அர்ப்பணிப்பிற்கொரு சான்றாகும்.' என்றார்.

இலங்கை கட்டிடக்கலை விருதுகள் என்பது பல்வேறு வகைகளின் ஊடே கைத்தொழிற்றுறை மைற்கற்களை கட்டமைக்கின்ற அதனது கடுமையான மதிப்பீட்டு செயன்முறைக்காக நன்கறியப்பட்டதாகும். வருடாந்த உற்பத்தி விருதுகளின் வெற்றியாளர்கள் நிபுணத்துவம்வாய்ந்த நடுவர்களது கடுமையான வகைத்தேர்வுகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுகின்றனர். உற்பத்திகளானவை தொழிநுட்ப தரவுகள், புதுமை, கட்டிடக்கலை பெறுமதிகள்,நிலைபேண்தன்மை, பெறுமதி சேர்வை, மற்றும் செயற்பாட்டு அளவீடுகள்  போன்ற காரணிகளினால் மதிப்பிடப்படுகின்றன. மேலதிக கருத்திற்கொள்ளும் விடயங்கள் கிடைப்பனவு,விலை, விற்பனைக்குப் பின்னரான சேவை, கடந்தகால செயற்றிட்ட பிரயோகங்கள் மற்றும் உத்தரவாத தரநிர்ணயங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயின் ஸ்மார்ட்கெயார் அக்யூவா சேப், மதிப்புமிக்க 'எக்ஸலன்ஸ் விருதினை" அனைத்து மதிப்பீட்டு அளவீடுகளிலும் சிறந்து விளங்கியமையினால் அடைந்துள்ளது. ஈரப்பதன் மற்றும் கடுமையான காலநிலைகளுக்கு எதிரான உச்சகட்ட பாதுகாப்பிற்கு மேலதிகமாக, பிரிமியம் பெயின்டானது தூசிகள், பாசிகள்,மற்றும் பங்கசுகளுக்கு எதிரான போராட்டக்குணத்திற்கும் அதைப்போன்று அதனது நீடித்த வெளிச்சத்தன்மை மற்றும் வெள்ளைநிறத்திற்காகவும் பரந்த அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது. 'மெரிட்' எனும் விருதுவென்ற ஸ்மார்ட்கெயார் டம்ப் சீல் அதனது அதியுச்ச வெடிப்பு பிணைப்பு இயலுமை,நெகிழ்வுத்தன்மையில் சிறந்த தரம் மற்றும் அதிசிறப்பான நீர்உட்புகவிடா தன்மைகள் என்பவற்றினால் தனித்துவமாக நிற்கின்றது.

சந்தைத் தலைவராக, ஏசியன் பெயின்ட்ஸ் கோஸ்வேயானது இலங்கையின் கட்டுமானத்துறையில் புத்தாக்கத்தினை தொடர்ந்தும் வழிநடாத்துவதுடன்நிலைத்தன்மை மற்றும் அழகியலை மறுவரைவிலக்கணப்படுத்தும் உயர் செயற்பாட்டு நிறப்பூச்சினை வழங்குகின்றது. கம்பெனியானது இலங்கையின் தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் காலநிலைச் சவால்களுக்கென பிரத்தியேகமான உலகத்தர தீர்வுகளை வழங்குவதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd