web log free
November 18, 2025

செலான் வங்கி, Home Lands உடன் இணைந்து பிரத்தியேக வீடமைப்புக் கடன்களை வழங்கவுள்ளது

செலான் வங்கி பிஎல்சி, இலங்கையின் முதன்மையான மற்றும் மிகவும் நம்பகமான real estate developer ஆன Home Lands குழுமத்துடன் மூலோபாய கூட்டாண்மையில் இணைந்து வீட்டு உரிமைத்துவத்தை மிக எளிதானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றவுள்ளது.  

இந்த மைல்கல் ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையேயான நீண்டகால உறவை வலுப்படுத்துவதுடன் Home Lands இடமிருந்து நேரடியாக வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது நிலத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக வீடமைப்புக் கடன் தீர்வுகளை அறிமுகப்படுத்துகிறது.

இந்த இணைவின் கீழ் செலான் வங்கி சொத்து பெறுமதியின் 90% வரையான தொகையை வீடமைப்புக் கடனாக பிரத்தியேகமாக Home Lands வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது. இது, வங்கியால் இதுவரை வழங்கப்பட்ட மிக உயர்ந்த நிதித் தொகை ஆகும். இந்த ஆதரவு, Home Landsஇன் 20+ ஆண்டுகால நம்பகத்தன்மை, புத்தாக்கம், சிறப்பு மற்றும் நிதி வலிமை ஆகியவற்றில் செலான் வங்கியின்நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் வெறுமனே 7 வேலை நாட்களுக்குள் விரைவாகவும் இலகுவாகவும் கடன் ஒப்புதல்களைப் பெறலாம். வீட்டு உரிமையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும்வ கையில் நெகிழ்வுத்தன்மை மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கவனத்துடன்25 ஆண்டுகள் வரையான திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்துடன் கடன்கள் வழங்கப்படுகின்றது.

9.0% (A.I.R) இலிருந்து தொடங்கும் போட்டித்தன்மை மிக்க சிறப்பு வட்டிவீதங்களும் கடன் தொடர்பான வினவல் முதல் பணம் பெறுதல் வரை வீட்டிற்கே வந்து இலவச ஆலோசனை மற்றும் சேவை வழங்கும்அர்ப்பணிப்புள்ள வீடமைப்புக் கடன் நிபுணர்களின் வழிகாட்டுதலும் செலான் வீடமைப்புக் கடனின் தனித்துவமான அம்சங்கள் ஆகும். செலான் வங்கியின் நாடளாவிய கிளை வலையமைப்பின் ஊடாகவாடிக்கையாளர்கள், ஆவணங்கள் மற்றும் ஒப்புதலுக்குப் பின்னரானதேவைகளுக்கான நேரடி ஆதரவையும் பெற்றுக் கொள்ளலாம்.  

கையொப்பமிடும் நிகழ்வில் கருத்து தெரிவித்த செலான் வங்கியின்தனிநபர் வங்கியியல் துணைப் பொது முகாமையாளர் திரு. யூஜின்செனவிரத்ன, “ Home Lands குழுமத்துடனான எங்கள் இணைவு மேலும்பல இலங்கையர்களுக்கு வீட்டு உரிமையை வழங்குவதில் செலான் வங்கியின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. பலரின் சொந்த வீடுவாங்கும் கனவை விரைவான ஒப்புதல்கள், நீண்ட திருப்பிச் செலுத்தும் காலங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் ஊடாக நனவாக்கஎண்ணியுள்ளோம்.” என்றார்.

Home Lands குழுமத்தின் நிர்வாக இயக்குநர் Ms. அமாயா ஹேரத் மேலும் கூறியதாவது: "செலான் வங்கியுடனான இந்த பிரத்தியேக நிதி கூட்டாண்மை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர் மதிப்பைவழங்குவதற்கான எங்கள் முயற்சிகளில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது. இது எங்கள் நீண்டகால உறவின் வலிமைக்கு உண்மையான சான்றாக இருப்பதோடு வரும் ஆண்டுகளில் எங்கள் தொடர்ச்சியான இணைவை இது மேலும் வலுப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

Home Lands குழுமத்திலிருந்து நிலம், வீடு அல்லது குடியிருப்பு போன்ற சொத்துக்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இப்போது செலான் வங்கி ஊடாக விண்ணப்பிப்பதன் மூலம் இந்த பிரத்தியேக சலுகைகளை அனுபவிக்கலாம். நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் சௌகரியம் ஆகியவற்றின் மீதான இரு நிறுவனங்களின் ஒருமித்த உறுதிப்பாட்டின் அடிப்படையில்  அதிகமான இலங்கையர்கள் தங்கள் கனவு இல்லங்களை சொந்தமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பை இக் கைகோர்ப்பு வழங்கவுள்ளது. மேலதிக தகவலுக்கு, செலான் வங்கியின் விசேடதொலைபேசி இலக்கமான 011-200 88 88ஐத் தொடர்பு கொள்ளவும். குறிப்பிட்ட திட்டம் தொடர்பான தகவல்களைப் பெற அல்லது தற்போதைய திட்டங்கள் பற்றி மேலும் அறிய அல்லது வீட்டு அமைவிடபார்வையை (site visit) திட்டமிட வாடிக்கையாளர்கள் 011 2 888 777 என்றஇலக்கம் ஊடாக Home Landsஐ தொடர்பு கொள்ளலாம்.

 

 

படவிளக்கம்:

இடமிருந்து வலமாக: செலான் வங்கி PLCயை பிரதிநிதித்துவப்படுத்திஅதன் திரு. நளின் கருணாரத்ன, பிரதம முகாமையாளர் - சந்தைப்படுத்தல்;  திரு.கயத்ர ஹதுருசிங்க, வங்கிச் சேவை (Product) முகாமையாளர் - தனிநபர் வங்கியியல்; Ms. அவந்தி வீரசிங்க, பிரதமமுகாமையாளர் - தனிநபர் வங்கியியல்; திரு. ஆசிரி அபயரத்ன, உதவிபொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை; திரு. யூஜின்செனவிரத்ன, துணை பொது முகாமையாளர் - தனிநபர் வங்கியியல்மற்றும் திரு. ரமேஷ் ஜயசேகர, செலான் வங்கியின் பணிப்பாளர்/பிரதமநிறைவேற்று அதிகாரி ஆகியோரும் Home Lands குழுமத்தைப்பிரதிநிதித்துவப்படுத்தி Ms. அமாயா ஹேரத், நிர்வாக இயக்குநர்; Ms. லங்கா ஜயசிங்க, செயல்பாடுகள் மற்றும் நிர்வாக இயக்குநர்; திரு. மன்சூர்ரிஷாத், சந்தைப்படுத்தல் துணை இயக்குநர்; Ms. நிமாலி குணசேகர, சட்ட இயக்குநர்; திரு.மரியோ ஒஃபென், பிரதம தொழிற்பாட்டு அதிகாரிமற்றும் திரு. M. R. D. பண்டார, வங்கிக் கடன்கள் மற்றும் மீட்புமுகாமையாளர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd