web log free
February 01, 2026

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்து வருவதாக, மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 184.69 ரூபாயாக இருந்தது. இது நேற்று 180.19 ரூபாயாக குறைந்துள்ளது.

ஒரு மாத காலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி 4.50 ரூபாயினால் அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளினால், இலங்கை ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது.

எனினும், இந்த ஆண்டில், சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வலுவடைய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd