web log free
November 03, 2025

11 அறிமுகத்தை பிற்போட்டது கூகுள்

கூகுள் நிறுவனமானது தனது அன்ரோயிட் இயங்குதளத்தின் புதிய பதிப்பான அன்ரோயிட் 11 இனை அறிமுகம் செய்யவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது.

அத்துடன் இந்நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நிகழ்வினை கூகுள் பிற்போட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம் “அன்ரோயிட் 11 இயங்குதளத்தினைப் பற்றி தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்வடைகின்றோம் ஆனால் கொண்டாடுவதற்கு இது நேரம் அல்ல” என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்நிகழ்வு பிற்போடப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்நிகழ்வு பிற்போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றதுடன் விரைவில் குறித்த இயங்குதளப் பதிப்பு அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Last modified on Wednesday, 10 June 2020 03:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd