web log free
February 01, 2026

மற்றுமொரு உள்ளூர் விமான சேவை


கொழும்புக்கும் மட்டக்களப்புக்குமிடையில், மற்றுமொரு உள்ளூர் விமான சேவை, எதிர்வரும் 1ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கப்படும் என இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தெரிவித்தார்.

அந்தச் சேவையை, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைப்பார்.

இந்த விமான சேவை, வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.

இந்தத் தினங்களில் தினமும் காலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 10 மணிக்குப் புறப்பட்டு, முற்பகல் 11க்கு மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்தை வந்தடையும்.

அதன் பின்னர், முற்பகல் 11.30க்கு திருகோணமலைக்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்புக்குத் திரும்பி, அன்று மாலை 3.30க்கு கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் புறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd