web log free
February 08, 2023

JAT நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் DFCC வங்கி


DFCC வங்கியானது அனைத்து உயர்ரக JAT தயாரிப்புகளுக்கும் இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டங்கள் மற்றும் பண மீளளிப்பு சலுகைகளுக்கு அனுசரணையளிப்பதற்காக JAT Holdings உடன் கைகோர்த்துள்ளது

30 ஆகஸ்ட், 2021: வர்த்தக வங்கிச்சேவையில் முன்னோடியான DFCC வங்கி, JAT தயாரிப்புக்களை வாங்க விரும்புகின்ற அனைத்து DFCC வங்கி அட்டை வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில், உயர் ரக JAT தயாரிப்புக்களுக்கு தனது பிரபலமான வட்டியின்றிய 12 மாத இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டத்தை வழங்குவதற்காக JAT Holdings Limited உடன் புதிய பங்குடமையொன்றை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் பெருமிதத்துடன் அறிவித்துள்ளது.

JAT Holdings இல் கொள்வனவு செய்யப்படுகின்ற அனைத்து Herman Miller நாற்காலிகள், பணி நிலையங்கள் மற்றும் தளபாடங்கள், அத்துடன் SEA ஜேர்மனிய சமையலறை தயாரிப்புகள் அனைத்துக்கும் DFCC வங்கி இப்போது வட்டியின்றிய, 12 மாத கால இலகு தவணைக் கொடுப்பனவுத் திட்டத்தை வழங்கும். மேலும், வழங்கப்படுகின்ற அனைத்து புதிய அட்டைகளுக்கும் 2021 செப்டம்பர் 30 வரை கடன் அட்டைக்கான இணைந்து கொள்ளும் கட்டணம் மற்றும் முதலாவது ஆண்டுக்கான வருடாந்த சந்தாக் கட்டணம் ஆகிய இரண்டையும் தள்ளுபடி செய்யவும் வங்கி தீர்மானித்துள்ளது. DFCC கடனட்டைகள், JAT Holdings இல் அனைத்து தயாரிப்புக்களின் கொள்வனவுகள் மற்றும் அனைத்து பிற கொள்வனவுகளுக்கும் 1% பண மீளளிப்பு சலுகையை வழங்குகிறது. இதன் மூலமாக அட்டைதாரர்கள் தாம் செலவு செய்கின்ற ஒவ்வொரு முறையும் சேமிக்கவும் வாய்ப்பினை வழங்குகிறது.

அனைத்து Herman Miller நாற்காலிகளும் “உட்காருவதற்கான விஞ்ஞான அறிவியல்” அடிப்படையில் பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நவீன பணிச்சூழலின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், அதிகபட்ச சௌகரியத்தையும், உடலுக்கு அதிகரித்த பிராண வாயு (ஒக்சிசன்) ஓட்டம் மற்றும் மேம்பட்ட தோரணை போன்ற ஆரோக்கியரீதியான நேர்மறை அனுகூலங்களையும் வழங்குகின்றன. அளவு, செயல்பாடுகள், அம்சங்கள், வண்ணங்கள், மற்றும் வீட்டிலிருந்தோ அல்லது நிறுவன சூழலில் வேலை செய்பவர்களுக்கோ என பரந்த அளவிலான பணியிட அமைப்புகளுக்கு ஏற்ற நாற்காலிகளைக் கொண்ட ஏராளமான தெரிவுகளை Herman Miller வழங்குகின்றது.

SEA என்பது ஒரு புகழ்பெற்ற ஜேர்மனிய வர்த்தகநாமம். இது இலங்கையில் JAT ஆல் ஏகபோகமாக விநியோகிக்கப்பட்டு வருவதுடன், இது தலைசிறந்த ஜேர்மனிய தராதரங்கள் மற்றும் நீடித்த உழைப்புடன் அதிநவீன மற்றும் ஆடம்பர வடிவமைப்புகளுடன் கூடிய பிரபலமான ஆடம்பர சமையலறைகள், அலுமாரிகள் மற்றும் குளியலறை அலுமாரிகளை வழங்குகிறது.

Herman Miller நாற்காலிகள் மற்றும் SEA ஜேர்மனிய சமையலறை தயாரிப்புக்கள் போன்ற உயர் ரக, அதியுயர் தரத்திலான தயாரிப்புகளை வாங்கும் போது அட்டைதாரர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைப்பதே இக்கூட்டாண்மையின் முக்கிய நோக்கமாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் அத்தகையவற்றை வாங்கும் போது அவர்களுக்கு கட்டுபடியாகின்ற வாய்ப்புக்களை அதிகரிப்பதுடன், அட்டைதாரர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும் உயர் ரக தயாரிப்புகளைப் பெற இடமளிக்கும் அதே நேரத்தில் அவர்களின் பணப்புழக்கத்தை எளிதாக நிர்வகிக்க உதவுகிறது.

DFCC வங்கி அட்டைதாரர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்கு தலவத்துகொட மற்றும் கொழும்பு வன் கோல் பேஸ் பேரங்காடியிலுள்ள JAT அனுபவ மையங்களுக்கு வருகை தருவதன் மூலமாக இந்த நன்மைகளை அனுபவிக்க முடியும்.  

இப்புதிய முயற்சி குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கூறுகையில், “அனைத்து DFCC வங்கி அட்டைதாரர்களுக்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருள்களை வாங்குவதற்காக பல நன்மைகளை வழங்கும் வகையில் நாங்கள் JAT Holdings Limited உடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். வாடிக்கையாளர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்துவதோடு, எங்கள் அட்டைதாரர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமைகளை எளிதாக்கும் சமயத்தில், தமக்கு கட்டுபடியாகும் என்ற கூடுதல் உணர்வையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. இலகு தவணைக் கொடுப்பனவு மற்றும் பண மீளளிப்பு சலுகைத் திட்டங்கள் புத்தாக்கமான, பயனுள்ள தீர்வுகள் மற்றும் சலுகைகள் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கூடுதல் பெறுமானங்களை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இது காண்பிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கி தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் தொடர்ச்சியாக கூடுதல் பெறுமானத்தை உறுதி செய்யும் வகையிலான கூட்டாண்மைகளை உருவாக்க முயற்சிக்கிறது. JAT Holdings Limited உடனான கூட்டாண்மை அதன் நீண்டகால கூடுதல் பெறுமானத்தைத் தோற்றுவிக்கும் பயணத்தின் அடுத்த படியாகும்.

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்      

DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 30 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.   

இடமிருந்து வலப்புறமாக காட்சியளிப்பவர்கள்:

றோய் அமல்டன் - அட்டைதாரர்களுக்கான மதிப்பு முன்மொழிவுகளுக்கான முகாமையாளர், DFCC வங்கி, டென்வர் லூயிஸ் - துணைத் தலைமை அதிகாரி / அட்டை மையத்தின் தலைமை அதிகாரி, DFCC வங்கி, கெவின் வன்டோர்ட் - செயற்திட்ட விற்பனைகளுக்கான பொது முகாமையாளர், JAT Holdings, அனிகா வில்லியம்சன் - பணிப்பாளர் - JAT Holdings, ஆசிரி இதமல்கொட - தனிநபர் வங்கிச்சேவை மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிப் பிரிவுக்கான சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரி, DFCC வங்கி, ஷெரா ஹசன் - துணைத் தலைமை அதிகாரி / Pinnacle சேவை தலைமை அதிகாரி / கிளை வங்கிச்சேவை திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் தலைமை அதிகாரி, DFCC வங்கி, முஃபீஸ் ஃபுவாத் - காட்சியறைக்கான பொறுப்பதிகாரி, JAT Holdings, டில்ஷான் ரொட்றிகோ - சந்தைப்படுத்தலுக்கான பொது முகாமையாளர், JAT Holdings

Last modified on Saturday, 04 September 2021 12:20