web log free
February 08, 2023

கம்பஹாவிலும் ஆரம்பிக்கப்பட்ட Uber Eats சேவைகள்

 Uber Eats தனது சேவைகளை இலங்கையின் 5 ஆவது நகரமான கம்பஹாவிலும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அறிவித்துள்ளது. இப்பிராந்தியத்திற்கு சௌகரியமாக உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிப்பதுடன், உள்ளூர் உணவகங்கள் மற்றும் வணிகர்களை புதிய வாடிக்கையாளர்களுடன் இணைக்கின்றது..

Uber Eats app கம்பஹா நகரம், கணேமுல்ல மற்றும் மொரகொட போன்ற அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் கிடைக்கப் பெறுகிறது. KFC மற்றும் Pizza Hut போன்ற உலகளாவிய வர்த்தகநாமங்கள் மற்றும் Hansa Village, Hogwarts Café, Perera & Sons மற்றும் Submarine Hut போன்ற உள்ளூர் பிரபல உணவகங்கள் போன்றவை அடங்கலாக 30 க்கும் மேற்பட்ட உணவகங்களில் இருந்து மக்கள் தற்போது ஓர்டர்களை மேற்கொள்ள முடியும்.

இச்சேவைகளின் ஆரம்பம் தொடர்பில் Uber Eats Sri Lanka நிறுவனத்தின் தலைமை அதிகாரியான பாவ்னா தத்லானி அவர்கள் கருத்து வெளியிடுகையில், “ஐந்தாவது நகரத்தில் Uber Eats சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கையில் எங்கள் பயணத்தை சிறப்பாக தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கம்பஹாவில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் மளிகை விநியோகத்தின் மகிமையை தற்போது இதன் மூலமாகக் கொண்டு வருகிறோம். இது இலங்கை மீதான எங்கள் அர்ப்பணிப்புடனான உறுதிப்பாட்டை மேலும் ஆழமாக்குவதுடன், உணவக பங்காளர்கள், வணிகர்கள் மற்றும் விநியோக பங்காளர்களுக்கு சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்,” என்று குறிப்பிட்டார். 

குறிப்பாக கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பலரும் வீடுகளில் தங்கியிருப்பதால், குடியிருப்பாளர்களுக்கு சௌகரியத்தையும், இலகுவான தெரிவையும் கொண்டு வருவதில் Uber Eats பெருமை கொள்கிறது. இது இப்பிரதேசத்தில் புதிய சேவைகளை உருவாக்கி அங்கு வளர்ந்து வருகின்ற உணவுக் கலாச்சாரத்திற்கு வலுச் சேர்க்கும்.

சேவைகளின் ஆரம்பத்தினைக் கொண்டாடும் வகையில், புதிய பாவனையாளர்கள் “HELLO70” என்ற குறியீட்டைப் பயன்படுத்தி கம்பஹாவில் உள்ள எந்த உணவகத்திலிருந்தும் ரூபா 700 தொகைக்கு மேற்பட்ட தொகையுடன் மேற்கொள்கின்ற முதலாவது ஓர்டருக்கு அதிகபட்சமாக ரூபா 500 வரை 70% தள்ளுபடியையும் பெற்று அனுபவிக்கலாம்.

Uber Eats தளத்தை பயன்படுத்த ஆரம்பிக்கும் இலவசமான, மிக எளிமையான படிமுறை:

  1. App பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யுங்கள் - App Store அல்லது Play Store இல் Uber Eats ஐத் தேடுங்கள்
  2. உங்கள் கணக்கைப் பதிவுசெய்து கொள்ளுங்கள் - புதிய கணக்கை உருவாக்க செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் தொலைபேசி இலக்கத்தை உபயோகித்து பதிவுசெய்து கொள்ளுங்கள்
  3. உணவைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்ற முகவரியைத் தெரிவு செய்யவும் - உங்கள் உணவு விநியோகிக்கப்பட வேண்டிய முகவரியை உள்ளிடவும்
  4. சரியான உணவைக் கண்டறியுங்கள் - உள்ளூர் உணவகங்களைத் தேடி அல்லது உணவு வகைகளின் அடிப்படையில் தேடி, உங்கள் சுவையரும்புகள் எதைக் கேட்கின்றன என்ற அடிப்படையில், விலை, உணவுத் தேவைகள் மற்றும் கிடைக்கும் வேகத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்தவும்.
  5. உங்களுடைய ஓர்டரை முன்வைக்கவும் - நீங்கள் விரும்பும் உணவுகளை இப்போதே கிடைக்கும் வகையில் அல்லது உங்கள் வசதிக்கேற்ப குறித்த வேறு ஒரு நேரத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் உங்கள் ஓர்டரை திட்டமிடவும்
  6. அட்டை அல்லது பணம் மூலம் பணத்தை செலுத்துங்கள் - உங்கள் டெபிட் / கடன் அட்டை மூலம் பணம் செலுத்துங்கள் அல்லது விநியோகத்தின் போது பணத்தைச் செலுத்துவதையும் தெரிவு செய்யலாம்
  7. உங்கள் விநியோகம் எந்த நிலைமையில் உள்ளது என்பதைக் கண்காணிக்கவும் - உங்கள் ஓர்டர் தயாரிக்கப்பட்டவுடன் நிகழ்நேர தகவல்களைப் பெற்று, உங்கள் இடத்திற்கு ஓர்டர் வழங்கப்படும் வரை அதை கண்காணிக்கவும்

 

Uber Eats தொடர்பான விபரங்கள்

ஒரு பொத்தானைத் (button) தொடுவதன் மூலமாக உள்ளூர் உணவகங்களைத் தேடவும், கண்டறியவும், உணவை ஓர்டர் செய்யவும், நம்பகத்தன்மையுடனும் விரைவாகவும் அதைப் பெற்றுக்கொள்ளவும் Uber Eats மக்களுக்கு இடமளிக்கின்றது. மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு Eats app அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த வணிகமானது உலகளவில் 6,000 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு சேவைகளை வழங்க Uber இன் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து நிபுணத்துவத்தின் அனுகூலத்தை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளது.

 

Last modified on Wednesday, 29 September 2021 11:02