web log free
April 19, 2024

[SL]A+  தர மதிப்பீட்டைச் சம்பாதித்துள்ள JAT நிறுவனம்

Moody’s உடன் இணைந்த இலங்கையின் முதன்மையான முதலீட்டு தர மதிப்பீட்டு நிறுவனமான ICRA Lanka Limited ஆன JAT Holdings PLC நிறுவனம் வலுவான வெளித்தோற்றத்துடன் மிகவும் நன்மதிப்பிற்குரிய [SL]A+ தர மதிப்பீட்டுடன் தொடர்ந்தும் வலுவாக நிலைபெற்றுள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. JAT Holdings PLC நிறுவனம் தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக இந்த மதிப்புமிக்க வழங்குநர் தர மதிப்பீட்டைத் தக்க வைத்துள்ளது. இது நிறுவனத்தின் வலுவான நிதியியல் ஸ்தானம் மற்றும் முதலீட்டாளர்கள் சமூகத்தின் மத்தியில் அது கொண்டுள்ள நன்மதிப்பிற்குச் சான்றாக உள்ளது. JAT Holdings PLC,  மரப் பூச்சு தயாரிப்புகளின் முதன்மையான இலங்கை பல்தேசிய உற்பத்தி நிறுவனம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்கள் குழுமம் ஆகிய சிறப்பு அந்தஸ்துகளைக் கொண்டுள்ளதுடன், சமீபத்தில் மிகையான அளவில் பங்குக் கொள்வனவு இடம்பெற்ற வெற்றிகரமான ஆரம்ப பொது பங்கு வழங்கல் நடவடிக்கை மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதன் மூலம் முதலீட்டாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்த சாதனை குறித்து JAT Holdings PLC நிறுவனத்தின் ஸ்தாபகரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஈலியன் குணவர்த்தன அவர்கள் கருத்து வெளியிடுகையில், “ICRA வின் [SL]A+ தர மதிப்பீடு மிகவும் மதிப்புமிக்க ஒரு தர மதிப்பீடாகும். இதற்கு பாரிய வர்த்தக நிறுவன சமூகத்தின் மத்தியில் மிகுந்த நன்மதிப்பு உள்ளதுடன், இதனைப் பெறத் தேவையான தரநிலைகள் ஒப்பிட முடியாதவை, கடுமையானவை மற்றும் முழுமையானவை. JAT Holdings PLC தொடர்ந்து 6 ஆண்டுகளாக இந்த தர மதிப்பீட்டை அடைந்திருப்பது நிறுவனத்தின் வலிமை, ஸ்திரத்தன்மை மற்றும் அதன் ஸ்தானத்தின் தெளிவான குறிகாட்டியாகும். எங்கள் அனுபவம் வாய்ந்த முகாமைத்துவ அணி, இலங்கையில் மரப் பூச்சுகளுக்கான எங்கள் மேலாதிக்க சந்தை ஸ்தானம், நமது ஒப்பிட முடியாத வர்த்தகநாம சந்தைப்பங்கு மற்றும் நமது நிதியியல் ஸ்தானத்தின் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை இது பிரதிபலிக்கிறது. தொடர்ச்சியாக 6 வருடங்களாக இந்த தர மதிப்பீட்டை தக்கவைத்துக்கொள்வதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தேசத்திற்கு சேவை செய்வதற்கான எங்கள் சிறந்த முயற்சிகளைத் தொடர உறுதிபூண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

புதிய மற்றும் தற்போதுள்ள பல்தேசிய நிறுவனங்களின் போட்டி இருந்தபோதிலும், அதன் கடுமையான தர நிலைகள் மற்றும் அதன் விளைவாக இந்த வர்த்தகநாமத்திற்கு கிடைக்கும் நம்பிக்கை மற்றும் பிரபலம் ஆகியவற்றின் காரணமாக, மரப் பூச்சுகள் துறையில் மறுபேச்சுக்கு இடமின்றி JAT Holdings PLC சந்தையில் தலைமைத்துவ ஸ்தானத்தைப் பேணி வருகிறது. இன்று, JAT ஆனது இலங்கையில் உயர் ரக, நீர் அடிப்படையிலான மரப் பூச்சுகளுக்கு தனித்துவமான நாமமாகத் திகழ்ந்து வருவதுடன், நிறுவனம் கட்டியெழுப்பியுள்ள வலுவான வர்த்தகநாம சந்தைப்பங்கு மற்றும் அதன் “Sayerlack” வர்த்தகநாமம் வழங்கிய ஈடுஇணையற்ற தரமே அதற்கான மூலகாரணம். JAT Holdings PLC அதன் வர்த்தகநாமமான “Harris” மூலமாக தூரிகைச் சந்தையிலும், மற்றும் அதன் இன்னுமொரு வர்த்தகநாமமான “SEA Bauformat” உடன் ஆடம்பர சமையலறைச் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக, இந்நிறுவனம் இலங்கை முழுவதும் பல முக்கிய அபிவிருத்திச் செயற்திட்டங்கள் மற்றும் பாரிய செயற்திட்டங்களுடன் அடிக்கடி தொடர்புபட்டுள்ளது.

சந்தையில் தனது முன்னணி வகிபாகம் மற்றும் புத்தாக்கத்தின் மீதான அர்ப்பணிப்பின் விளைவாக, JAT Holdings ஒரு வலுவான நிதியியல் ஸ்தானத்தைப் பேணி வருவதுடன், உயர்ந்த மட்டத்தில் இலாபங்களை வழங்கும் மரப் பூச்சுக்கள் தயாரிப்புக்களின் உயர் மட்ட வருமானத்தின் துணையுடன், 2021 நிதியாண்டில், நிறுவனத்தின் தொழிற்பாடுகள் மூலமான வருமான மட்டம் கடந்த ஆண்டில் பதிவாக்கப்பட்ட 13.8% உடன் ஒப்பிடுகையில் 14.1% ஆக மேம்பட்டுள்ளது. 2022 நிதியாண்டின் 1 ஆவது காலாண்டில், நிறுவனத்தின் தொழிற்பாடுகள் மூலமான வருமான மட்டமானது மேம்பட்ட முகாமைத்துவ செயல்திறன் காரணமாக 14.9% ஆக மேலும் மேம்பட்டுள்ளது.

JAT Holdings PLC நிறுவனத்தின் மூலதனக் கட்டமைப்பானது ஆரோக்கியமான, உள்வாரியாக திரட்டப்பட்ட நிதி மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான அதன் கடன் ஆகியவற்றின் காரணமாக மிகவும் சிறப்பானதொரு ஸ்தானத்தில் உள்ளது. ஜூலை 2021 இல் அதன் ஆரம்ப பொது பங்கு வழங்கல் நடவடிக்கை மூலம் திரட்டப்பட்ட ரூபா 1.5 பில்லியன் தொகையானது நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்கு அதன் ஆரோக்கியமான மூலதனக் கட்டமைப்பைப் பேணிப் பராமரிக்கும் அதே வேளையில் மூலதன செலவினங்களுக்கு நிதியளிக்க இடமளிக்கிறது. குறைந்த கடன் மட்டங்கள் மற்றும் சிறப்பான தொழிற்பாட்டு இலாப மட்டங்களுக்கு மத்தியில் நிறுவனத்தின் கடன் குறிகாட்டிகள் சிறந்த ஸ்தானங்களில் உள்ளன. அதன் கடன் தோற்றம் குறுகிய கால தொழிற்படு மூலதன கடன்களை நோக்கி சாய்ந்துள்ள அதே நேரத்தில் தனித்த மட்டத்தில் தவணைக் கடன்கள் ஏதுமின்றியும் உள்ளது. இலங்கை, தெற்காசியா மற்றும் ஆபிரிக்காவில் JAT Holdings PLC நிறுவனத்தின் எதிர்கால மூலோபாய விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் நீண்ட காலப் போக்கில் நிறுவனத்தின் நிதியியல் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணிப் பராமரிக்க உதவும். மேலும், பங்களாதேஷ் நாட்டிலும் JAT தனது உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன், அந்த நாட்டில் ஏற்கனவே ஸ்தாபித்துள்ள தனது வலுவான இருப்பினை மேலும் அதிகரித்துள்ளது.

1993 இல் ஆரம்பிக்கப்பட்ட JAT Holdings நிறுவனம், அன்று முதல் இலங்கையில் மரப் பூச்சுகளுக்கான சந்தை முன்னோடியாகவும், நிறுவனங்களின் இலாபத்தின் முக்கிய பங்கு அந்நியச் செலவாணி வருமானம் கிடைக்கப்பெறும் வகையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைகளிலும் நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகவும் தன்னை சிறப்பாக நிலைநிறுத்தியுள்ளது. இது LMD சஞ்சிகையால் இலங்கையின் முதல் 100 மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து 4 வருடங்களாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன், Brand Finance இன் முதல் 20 கூட்டு வர்த்தக நிறுவனங்கள் பட்டியலிலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளமை போன்ற அங்கீகாரங்களால் அதன் சிறப்புக்கு மேலும் சான்றாக அமைந்துள்ளது. அதன் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கைக்கு முன்பதாக, இலங்கையில் ஒரேயொரு தனியார் நிறுவனமாக JAT Holdings மாத்திரமே தொடர்ந்து 5 வருடங்களாக Moody’s ICRA “A+ Stable” தர மதிப்பீட்டைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய மீள்உறுதிப்பாடு தொடர்ச்சியாக 6 ஆவது ஆண்டாகக் கிடைக்கப்பெற்றுள்ளது.

Last modified on Wednesday, 29 September 2021 11:00