web log free
June 25, 2022

பிரத்தியேக வீட்டுக் கடனை வழங்க JAT லிவிங்குடன் DFCC வங்கி

DFCC வங்கி பிரத்தியேக வீட்டுக் கடன் தீர்வுகளை வழங்க JAT Living உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது

இலங்கையின் முதன்மையான வணிக வங்கியான DFCC வங்கியானது, JAT Living இன் உடமையாக, அதனால் தலவத்துகொடவை அண்டியதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற ‘146 Residencies’ என்ற மனதை மயக்கும் குடியிருப்புத் திட்டத்தில் ஆதனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக வீட்டுக் கடன் திட்டத்தை வழங்குவதற்காக JAT Living உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தலவத்துகொடவில் அமைந்துள்ள 146 Residencies குடியிருப்புத் திட்டம், JAT Living ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய நிர்மாணச் செயற்திட்டம் என்பதுடன், இரண்டு, மூன்று மற்றும் நான்கு படுக்கையறைகள் கொண்ட மலைப்பூட்டும் 112 அடுக்குமனை குடியிருப்புகளுடன், மூன்று தளங்கள் கொண்ட வாகனத் தரிப்பிடம் மற்றும் ஆனந்தத்தைத் தூண்டும் மேற்தள பூந்தோட்டம், நடைபாதை, யோகாசன பயிற்சித் தளம், சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானம், வியப்பூட்டும் காட்சிகளுடனான நீர்மட்டத்துடன் கூடிய நாற்பக்க சுவர்களைக் கொண்ட நீச்சல் தடாகம் மற்றும் மதுபான விருந்தகத்துடன் கூடிய முழுமையான பொழுதுபோக்கு வசதிகள் கொண்ட குடியிருப்பாளர்களுக்கான க்ளப் ஆகியவற்றை உள்ளடக்கிய 8,800 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட மேற்தளத்தையும் கொண்டுள்ளது.

இந்தச் சிறப்புச் சலுகையானது, தேவையான கடன் மதிப்பீட்டு அளவுகோல்களைப் பூர்த்திசெய்து, ‘146 Residencies’ மூலம் ஆதனத்தை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள் 4 ஆண்டுகள் சலுகைக் காலத்தை அனுபவிக்க முடியும் என்பதுடன், அவர்களின் தேவைக்கேற்ப விசேடமாக கட்டமைக்கப்பட்ட மீள்கொடுப்பனவுத் திட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு மேலதிகமாக, DFCC வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே கடனைத் தீர்க்கும் போது அதற்காக அறவிடப்படும் கட்டணங்களுக்கு விலக்களித்தல் மற்றும் மூன்று பணி நாட்களுக்குள் கடன் அங்கீகாரத்தை வழங்குதல் போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்கும்.

புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் அதன் தொடர்ச்சியான பலன்கள், JAT Living வாடிக்கையாளர்களுக்கு DFCC வங்கியிடமிருந்து மிகவும் கட்டுபடியான வழிமுறையில் வீட்டுக் கடன் தீர்வுகள் மூலம் தங்கள் எதிர்காலக் கனவை நனவாக்கும் வீடுகளை வாங்குவதற்கான அருமையான வாய்ப்பை வழங்குகின்றன.

அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற வகையில் DFCC வங்கியானது, வீட்டுக் கடன் வசதி அனைவருக்கும் கட்டுபடியாவதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது. தனது அனைத்து வாடிக்கையாளர்களினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களது பயணத்தில் இது முக்கியமான தேவையாக உள்ளது. கட்டுபடியாகும் வீட்டுக் கடன் தெரிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாமை சமீப காலங்களில் ஒரு குறிப்பிடத்தக்க தடையாக காணப்படுவதுடன், மேலும் வாடிக்கையாளர்கள் தற்போதுள்ள எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, DFCC வங்கியின் புதிய பிரத்தியேக வீட்டுக்கடன் ஊக்குவிப்பு கணிசமான அளவில் சுமையைக் குறைப்பதுடன், தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் மதிப்பை தோற்றுவிக்கிறது.

JAT Living உடனான புதிய கூட்டாண்மையின் முக்கியத்துவம் குறித்து DFCC வங்கியின் தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை வங்கிச் சேவைகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான ஆசிரி இதமல்கொட அவர்கள் கருத்து வெளியிடுகையில், “மிகவும் கட்டுபடியான வழிமுறைகளில் வீட்டுக் கடன் தீர்வை வழங்குவதற்கு JAT Living உடன் கைகோர்ப்பதில் DFCC வங்கி பெருமை கொள்கிறது. எந்த சூழ்நிலையிலிருந்து தலைநிமிரும் ஆற்றல் கொண்ட பொருளாதாரத்தை நிலைநாட்டும் வங்கியின் முயற்சிகள், கட்டுபடியான வழிகளில் வழங்கும் வீட்டுக் கடன்களின் மூலம் மேலும் ஊக்குவிக்கப்படும். இக்கூட்டாண்மையானது வங்கித் துறையிலும், பொது மக்களுக்காகவும் பாரிய அளவிலான பொருளாதார மற்றும் சமூக மதிப்பை தோற்றுவிக்கிறது. அனைவருக்கும் பயனளிக்கும் நிலைபேண்தகைமை கொண்ட, எந்த சூழ்நிலையிலிருந்தும் தலைநிமிரும் ஆற்றல் கொண்ட பொருளாதாரத்தை நிலைநாட்டுவதற்கான வங்கியின் நீண்டகால மூலோபாயத்தை முன்னெடுப்பதில் இது மற்றுமொரு படியாகும்,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்   

 

DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 30 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.    

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி: DFCC வங்கியின் தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை வங்கிச் சேவைகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான ஆசிரி இதமல்கொட மற்றும் JAT Holdings நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளரான அனிகா வில்லியம்சன் ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை பரிமாற்றம் செய்யப்படும் காட்சி.

 

 

Last modified on Tuesday, 14 December 2021 16:48