மக்கள் வங்கியின் சுய வங்கிச்சேவை அலகுகள் 2021 ஆம் ஆண்டில் 1.2
ட்ரில்லியன் ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு உதவியுள்ளன.
18 January 2022, Colombo:
2021ஆம் ஆண்டில் 1.2 ட்ரில்லியனுக்கும் அதிகமான
பெறுமதியிலான 82.6 மில்லியன் பரிவர்த்தனைகளை மக்கள் வங்கி தமது ATMகள், CDMகள் மற்றும் சுய வங்கிச் சேவை அலகுகளின் நாடளாவிய வலையமைப்பின் மூலம்
மக்களுக்கு வழங்கியுள்ளதாக மக்கள் வங்கி அண்மையில் அறிவித்தது.
இலங்கையில் 2ஆவது பெரிய வணிக வங்கியான மக்கள் வங்கி, 741க்கும் அதிகமான
தொடர்பு மையங்களைக் கொண்ட மிகப்பெரிய வலையமைப்புடன் 14 மில்லியனுக்கும்
அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட, இலங்கையின் மிகப்nரிய வாடிக்கையாளர்
தளத்தையும் கொண்டுள்ளது. 2021ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் வங்கியின் 797
ATMகள், ரூ. 800 பில்லியன் பெறுமதியிலான பரிவர்த்தனைகளை எளிதாக்கியுள்ளன.
அதே வேளை தமது 298 CDMகள் 460 பில்லியன் பெறுமதியிலான பரிவர்த்தனைகளை
கண்டுள்ளன. மேலும் வங்கியின் புத்தாக்கம்மிக்க சுய வங்கிச் சேவை அலகுகளின் (SBU)
மூலம் 5பில்லியன் ரூபா பெறுமதியிலான பரிவர்தனைகளை ஆதரிக்கின்றன. இந்த
எண்ணிக்கைகள் மக்கள் வங்கியின் சுய வங்கிச் சேவை அலகுகள் நாட்டு மக்கள்
மத்தியில் பெற்றுள்ள பிரபலத்தின் அளவைக் காட்டுகின்றன. மக்கள் வங்கியின் ளுடீருக்கள்
யுவுஆகள், ஊனுஆகள் மற்றும் வங்கி அலகுக் கூடங்களைக் கொண்டுள்ளன. இதன் மூலம்
வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப வருடத்தில் 365 நாட்களும் 24 மணிநேரமும்
வங்கிச்சேவைகளை அனுபவித்திட முடியும்.
2022ஆம் ஆண்டு தொடங்கிடும் போது தடையற்ற டிஜிட்டல் வங்கிச் சேவைகளை
வழங்குவதில் புதுப்பிக்கப்பட்ட கவனத்தை செலுத்தி, தேசத்தின் நிதித் தேவைகளுக்கு
சேவை செய்வதற்கான தமது உறுதிப்பாட்டினை மக்கள் வங்கி புதுப்பித்துக்கொள்கிறது.
SBUக்களின் பங்களிப்பு என்ற வகையில் அதன் டிஜிட்டல் வங்கிச் சேவை அப்களான
People’s Wave, People’s Wyn மற்றும் People’s Pay ஆகியவை இலங்கையில் டிஜிட்டல்
வங்கியியல் அமைப்பை மாற்றியுள்ளன. 1 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களையும்,
நாட்டில் மிகவும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்படும் வங்கியியல் அப் ஆக People’s Wave விளங்குகிறது.
மேலும் இது 50 வகையான வேறுபட்ட நிதிப் பரிவர்த்தனைகளுக்கு
டிஜிட்டல் அணுகலையும் வழங்குகின்றது.
60ஆண்டு காலங்களுக்கும் மேலாக மக்களுக்கு நிதித்தீர்வுகளை வழங்கி வருபவர்களாக
மக்கள் வங்கி விளங்குகின்றது. மேலும் அனைத்து இலங்கையர்களுக்கும் நன்மை
பயக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் வங்கியியல்
துறையில் ஒரு முன்னணி நிறுவனமாகவும் பரிணமித்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல்
இலங்கையின் வங்கித்துறையில் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு
ஆகியவற்றில் மக்கள் வங்கி ஒரு முன்னோடி பங்கினை வகித்து வருகிறது. அப்போதிருந்து
ஒவ்வொரு தொடுபுள்ளியிலும் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட வசதி, வேகம் மற்றும்
செயற்திறனை வழங்கும் பல்வேறு டிஜிட்டல் வங்கித் தீர்வுகளை வழங்க ஆரம்பித்துள்ளது.
மக்கள் வங்கி ISO/IEC 27001:2013 சான்றிதழுடன் அங்கிகாரம் பெற்ற இலங்கையின்
முதலாவதும் ஒரே வங்கியாகவும் விளங்குகின்றது. இது தகவல் பாதுகாப்பிற்கான மிக
உயர்ந்த சர்வதேச அங்கிகாரமாகவும் விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.