- 2022 இல் அதிகபட்சமாக தினசரி வருகை கடந்த சனிக்கிழமை 4,090 ஐ எட்டியது.
- பிப்ரவரி முதல் ஐந்து நாட்களில் 11,500 பேர் வந்துள்ளனர
கடந்த சனிக்கிழமை (5) சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022 இல் முதல் தடவையாக 4,000 ஐத் தாண்டியதுடன், 4,090 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் (AASL) இன் படி, பிப்ரவரி 2022 முதல் ஐந்து நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11,500 ஆக அதிகரித்தது.
ஜனவரி 2022 இல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 82,327 ஆக இருந்தது, அதிகபட்ச தினசரி வருகை எண்ணிக்கை ஜனவரி 5 அன்று 3,371 சுற்றுலாப் பயணிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) பணிப்பாளர் நாயகம் (DG) தம்மிக்க விஜேசிங்க, 2022 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை வருமானமாக சுமார் 1.1 பில்லியன் டொலர்களை ஈட்டுவது தமது இலக்கு என ஆங்கில செய்திச் சேனல் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.