web log free
March 29, 2024

INSEE இலங்கையின் ஆற்றல் மற்றும் உணவு இருப்புக்களை உறுதிப்படுத்த உதவுகிறது

INSEE Cement நிறுவனம்: இலங்கையின் எரிசக்தி மற்றும் உணவு இருப்பினை உறுதிப்படுத்த உதவுகிறது

INSEE Cement நிறுவனம் இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன், சன்ஸ்தா மற்றும் மஹாவலி சீமெந்து போன்ற புகழ்பெற்ற சீமெந்து வர்த்தகநாமங்களைக் கொண்டுள்ள நிறுவனமாகும். தற்போது, ஊவா மாகாணத்தில் உள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்திற்கு தேவையான சீமெந்தினை INSEE Cement நிறுவனம் விநியோகம் செய்கிறது. புதிய நீர் மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்தல், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல் ஆகியன திட்டத்தில் அடங்கும். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் என்பது மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை ஆகியவற்றுடன் இணைந்து நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு மேற்கொண்ட ஒரு முயற்சியாகும். இந்த திட்டம் ஈரானிய ஒப்பந்த நிறுவனமான FARAB இற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், INSEE Cement நிறுவனம் இத்திட்டத்திற்கு 85,000 மெட்ரிக் தொன்களுக்கும் மேலாக தனது தனியுரிமத்தின் கீழான ரெபிட் ஃபுளோ மற்றும் சன்ஸ்தா சீமெந்து தயாரிப்புக்களை ஏற்கனவே வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை வலியுறுத்தி, INSEE Cement நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான குஸ்டாவோ நவாரோ அவர்கள் கருத்து வெளியிடுகையில், “உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஒரு முக்கியமான திட்டமாகும். இது நாடளாவில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். இது புதுப்பிக்கத்தக்க மின்சார மூலத்தை தோற்றுவிக்கும், அதே நேரத்தில் பரந்த விவசாய நிலங்களுக்கு தேவையான நீர்ப்பாசனத்தையும் வழங்கும். ஒன்றாக, இது இலங்கையின் உணவு மற்றும் எரிசக்தி இருப்பினை மேலும் வலுப்படுத்த உதவும். குறிப்பாக, இது தொற்றுநோய்க்கு பிந்தைய சூழலில் முக்கியமானது. INSEE நிறுவனத்தில், வாழ்க்கைக்கான கட்டுமானத்தை நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்தத் திட்டத்திற்கு மிகப்பெரிய சீமெந்து வழங்குநர்களாக இருப்பது எமக்கு மிகுந்த பெருமிதமாகும். மேலும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக நமது வளங்களை பயன்படுத்தவும் இது இடமளிக்கிறது. இத்திட்டம் முடிவடையும் வரை, இத்திட்டத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற நாங்கள் ஆவலாக உள்ளோம். மேலும் இந்த மூலோபாய தேசிய அபிவிருத்தி முயற்சி தொடர்பாக அரசாங்கத்தின் தொலைநோக்கு இலக்கினை இச்சந்தர்ப்பத்தில் பாராட்ட விரும்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

உமா ஓயா நீர்மின்னுற்பத்தி வளாகம் என்றும் அழைக்கப்படும் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம், உமா ஓயாவின் குறுக்கே இரண்டு அணைகள் மற்றும் வெலிமடையில் ஒரு கிளை ஆறு, ஒரு தண்ணீர்-படுக்கை திசைதிருப்பல் சுரங்கப்பாதை மற்றும் 120 மெகாவாட் திறன் கொண்ட நிலத்தடி நீர் மின்னுற்பத்தி நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இத்திட்டம் நிறைவடைந்தவுடன், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சுமார் 5000 ஹெக்டேயர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்வதற்கும் மற்றும் பிற கீழ்நிலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் 145 மில்லியன் கன மீட்டர் தண்ணீரைத் திசைதிருப்பிவிட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருடாந்த மின்னுற்பத்தி 290 கிகாவாட் ஆக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மற்றும் மின் உற்பத்தி நிலையம் 22.7 கிலோ மீட்டர், 132 கிலோ வோல்ற்று  விநியோக இணைப்பு மார்க்கத்தின் வழியாக பதுளை மின் வழங்கல் துணை மின் நிலையத்துடன் இணைக்கப்படும். திட்டத்திற்கு 529 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மற்றும் மொத்த திட்ட மதிப்பில் 85% ஈரான் அரசாங்கத்தால் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு வங்கி மூலம் கடனாக வழங்கப்படுகிறது.

INSEE Cement அல்லது Siam City Cement (Lanka) Limited, 1969 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நிறுவப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான Siam City Cement Public Company Limited (SCCC) இன் ஒரு உறுப்பு நிறுவனமாகும். INSEE Cement நிறுவனம் INSEE வர்த்தகநாமத்தின் கீழ், சங்ஸ்தா, மகாவலி மெரின், மகாவலி மெரின் பிளஸ், INSEE ரெபிட் ஃபுளோ, INSEE ரெபிட் ஃபுளோ பிளஸ் மற்றும் INSEE எக்ஸ்ட்ரா சீமெந்து போன்ற சீமெந்து வகைகளை தயாரித்து வருகின்றது. இலங்கை பசுமை கட்டிட சபையிடமிருந்து பசுமை அடையாள சான்று அங்கீகாரத்தைப் பெற்ற முதல் ‘பசுமை சீமெந்து தயாரிப்பு’ INSEE சீமெந்தாகும். இந்த நிறுவனம் இலங்கையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரேயொரு சீமெந்து உற்பத்தி நிறுவனமாகும்.  அத்துடன் LMD சஞ்சிகையால் மிகவும் நன்மதிப்புப் பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.