web log free
June 25, 2022

DFCC வங்கி SLIM DIGIS 2.1 “Salli Athin Allanne Na”

DFCC வங்கி SLIM DIGIS 2.1 விருதுகள் நிகழ்வில் Finalists மத்தியில் பிரகாசிப்பு - “Salli Athin Allanne Na” டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விளம்பரப் பிரச்சாரம்

அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, DFCC Virtual Wallet ஐ மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அதன் அதிசிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விளம்பர பிரச்சாரமான “Salli Athin Allanne Na” க்காக சமீபத்தில் SLIM DIGIS 2.1 விருதுகள் நிகழ்வில் finalist ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வேகமாகப் பரவியதன் காரணமாக, பணத்தாள்களின் பயன்பாடு பணப் பரிவர்த்தனைகளுக்கு விருப்பத்திற்குரிய ஒரு தெரிவாக இல்லாத காலகட்டத்தில், இந்த பிரச்சாரம் சரியான நேரத்தில் DFCC வங்கியின் டிஜிட்டல் பணப்பையை (Digital Wallet) வாடிக்கையாளர்களிடையே வேகமாக கொண்டு போய் சேர்த்தது.

DFCC வங்கியானது SLIM DIGIS விருதுகள் நிகழ்வில் பங்குபற்றிய முதல் நிகழ்வாக இது அமைகிறது. தேசிய தளத்தில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் தலைசிறந்த முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. DFCC வங்கியின் புத்தாக்கமான டிஜிட்டல் பணப்பை மற்றும் வங்கிச்சேவை தீர்வுக்கான பிரச்சாரமான, DFCC Virtual Wallet, வங்கிச்சேவை மற்றும் நிதிப் பிரிவில் சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விளம்பர பிரச்சாரத்திற்கான இறுதிப் போட்டியாளர்களிடையே (finalists) அங்கீகரிக்கப்பட்டது.

SLIM DIGIS விருதுகள் வழங்கும் விழா தலவத்துகொட மொனார்க் இம்பீரியலில் அனைத்து தொழில்துறையினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 400 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு இடம்பெற்றது. வங்கியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட டிஜிட்டல் மற்றும் படைப்பாக்க முகவர் நிறுவனங்களான Loops Digital மற்றும் Storybook ஆகியவையும் இந்த விளம்பர பிரச்சாரத்திற்கான அவர்களின் பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டன.

இது தொடர்பில் தனது உணர்வுகளை வெளிப்படுத்திய DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான திமால் பெரேரா அவர்கள், “SLIM DIGIS போன்ற புகழ்பெற்ற தளத்துடன் எங்களின் முதன்முதல் ஈடுபாட்டின் போது இறுதிப் போட்டியாளர்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்டமை எமக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் இலங்கையின் வர்த்தக வங்கிகளில் ஒன்றாகவும், அனைவருக்கும் ஏற்ற வங்கிச் சேவைகளை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ள ஒன்றாகவும், டிஜிட்டல் செயலாக்கத்தின் இன்றியமையாத முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். DFCC Virtual Wallet என்பது அந்த ஆழமான புரிதலின் பெறுபேறாகும். இது முழுமையான டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவத்தை வழங்குகிறது. இது பரிவர்த்தனை வங்கிச்சேவைக்கு அப்பாற்பட்டது. பிற கூட்டாளர்களுடன் ஒத்துழைக்கத் தயாராகவுள்ள வாழ்க்கை முறை அணுகுமுறையைத் தழுவுகிறது. இவ்வாறாக, இலங்கையின் மிகவும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய மற்றும் டிஜிட்டல் வசதி கொண்ட வங்கிகளில் ஒன்றாக வெளிவருவதை நோக்கிய எமது வர்த்தகநாமத்தின் பயணத்தில் இந்த சாதனை எமக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகும்,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேண்தகைமையின் தலைமை அதிகாரியான நில்மினி குணரத்ன அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “இன்று சந்தைப்படுத்தல் சூழலானது டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மிகவும் பரவலாக உபயோகிக்கப்படும் ஊடகமாக உருவாகி வருவதையும் அடைவு மட்டம் மற்றும் வெற்றி வீதங்களை அளவிடுவதற்கும் உங்களுக்கு இடமளிக்கிறது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே, டிஜிட்டல் இப்போது வங்கிகளின் தகவல் தொடர்பாடல் மூலோபாயத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. இது நாம் வழங்கும் பல்வேறு நிதி முன்மொழிவுகளில் நமது சந்தை இலக்குகளை அடைய வழிகோலுகிறது. “Salli Athin Allanne Na” விளம்பர பிரச்சாரமானது டிஜிட்டல் தலைமையிலான முழுமையான (360) பிரச்சாரமாகும். இதில் சாத்தியமான அதிகபட்ச App நிறுவல்கள், விளம்பர செயல்படுத்துதல்கள் மற்றும் Wallet இல் பரிவர்த்தனை அளவு மட்டங்களை அதிகரிப்பதே எங்கள் நோக்கங்களாகும். இந்த நோக்கங்களை மனதில் கொண்டு, முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டொக், கூகுள் மற்றும் programmatic சார்ந்த விளம்பரங்கள் உட்பட பல ஊடகங்களில் டிஜிட்டல் விளம்பர பிரச்சாரத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். விளம்பர பிரச்சாரம் பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. எனவே, சிறந்த ஒன்றுபட்ட உழைப்பின் விளைவாக கிடைத்த இந்த அங்கீகாரத்தை நாங்கள் மிகவும் பெருமையுடனும் திருப்தியுடனும் ஏற்றுக்கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.

SLIM DIGIS விருதுகள் Sri Lanka Institute of Marketing (SLIM) ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கையின் சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பணி, புத்தாக்கம் மற்றும் திறமைகளை அங்கீகரித்து கொண்டாடுகின்றன. SLIM என்பது இலங்கையில் சந்தைப்படுத்துதலுக்கான தேசிய அமைப்பாகும். SLIM DIGIS ஆனது டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் புத்தாக்கம் மற்றும் வளரும் திறமைகளை அங்கீகரிக்கும் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க விருது நிகழ்வுகளில் ஒன்றாகும்.

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்

DFCC வங்கியானது 66 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2030, பசுமை பேணும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable தரப்படுத்தல் மற்றும் Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable தரப்படுத்தல் ஆகியவற்றையும் பெற்றுள்ளது.

ஆசிரி இத்தமல்கொட - DFCC வங்கி சில்லறை வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான வங்கிச்சேவைப் பிரிவின்  சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரி (இடமிருந்து 7 ஆவது) அவர்கள் சனத் சேனாநாயக்க, தலைமை நிர்வாக அதிகாரி / நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளர், SLIM (இடமிருந்து 6 ஆவது) அவர்களிடமிருந்து இதற்கான சான்றிதழை ஏற்றுக்கொள்வதுடன், நில்மினி குணரத்ன - DFCC வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேண்தகைமைக்கான துணைத் தலைமை அதிகாரி (இடமிருந்து 8 ஆவது), தினேஷ் ஜெபமணி - DFCC வங்கியின் டிஜிட்டல் மூலோபாயத்திற்கான துணைத் தலைமை அதிகாரி (இடமிருந்து 2 ஆவது) ஆகியோரும் அருகில் உள்ளனர். மேலும் DFCC வங்கி சந்தைப்படுத்தல் அணி, டிஜிட்டல் ஊடகங்கள் அணி மற்றும் Loops Digital விளம்பர முகவர் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் படத்தில் உள்ளனர்.

21 பெப்ரவரி 2022

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd