web log free
November 22, 2024
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. எனினும் சில கோவில்களில் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டும் அனுமதி என்ற கட்டுப்பாடு உள்ளது. மதுரையில் இதுவரை 75 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 35 சதவீதம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

 

வாழை இலைகளில் சாப்பிடுவதும், பெரும்பாலான விருந்துகளில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுவதையும் பார்த்து இருப்போம். அதே போன்ற தையல் இலைகளை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

தற்போதைய நெகிழி போன்ற என்னற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட விதவிதமான தட்டுகளுக்குப் பதிலாக, முன்பெல்லாம் தைக்கப்பட்ட இலையில் (தையல் இலை) தான் உணவுகளை இட்டு உண்ணவும், பொட்டலங்கள் கட்டவும் பயன்படுத்தப்படும்.

ஆல இலை, மந்தாரை இலை, முருக்கை இலை போன்ற இலைகளை மடிப்புகள் இல்லாமல் பக்குவம் செய்து முற்றிலும் உலர்ந்தபின் மெல்லிய ஈர்க்கால் வட்ட வடிவமாகத் தைத்து உபயோகித்து வந்தோம்.

இந்த இலைகள் திருவிழாக்கள் மற்றும் கோயில்களில் பாரம்பரியமாக வழங்கப்படும் உணவினை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் ஒரு குடிசைத் தொழிலாக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வேலையாகும்.

தற்போது தமிழகத்தில் உள்ள நெகிழி தடையால் பெரும்பாலான வீடுகளில் இந்த தையல் இலைகளை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

வாழை இலை போன்றவற்றை ஓரிரு நாட்கள் மட்டுமே வைத்து உபயோகிக்க கூடிய நிலையில், இந்த தையல் இலைகளை நீண்டகாலம் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

கடைகளில் சட்டினி, பஜ்ஜி, போண்டா, ஊறுகாய் விற்பனைக்கு வந்தபோது அதை சிறு சிறு பொட்டலங்களாக மந்தாரை இலைகளேயே உபயோகித்தனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தையல் இலைகளை சாப்பிட்டு தூக்கி எறிந்தால் கால்நடைகளுக்கு உணவாகவும். இல்லையெனில், சில நாட்களில் மண்ணோடு மக்கி காணாமல் போகும். நெகிழி பல ஆண்டுகள் ஆகியும் மக்காமல் அப்படியே கிடக்கும்.

இன்றைய இணையவழி மூலம் உணவு வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் இதை பின்பற்ற செய்யவேண்டும்.

எனவே இத்தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு தையல் இலைகளை பயன்படுத்துவதன் மூலம் குடிசைத்தொழிலை ஆதரித்து, நெகிழி பயன்பாட்டை தவிர்த்து இயற்கையை ஒத்து, நம் மண்ணின் வளத்தையும் காக்கலாம். தற்சார்பாக நமது வாழ்க்கையை நடத்திட பெரும்பங்காற்றும். 

தமிழரின் அடையாளமாக இன்று வரை நாம் பார்ப்பது சோழர்களை தான். சோழர்கள் என்றவுடனே நமக்கு அவர்கள் கட்டுவித்த ஆலயங்கள் தான் நினைவிற்கு வரும்.

சோழர் படைப்பில் என்னற்ற கோவில்கள் இருக்கின்றன. அவற்றுள் பல சிறப்புவாய்ந்தவை.

அவ்வாறான கோவில்களில் ஒன்று தான் மிக தொண்மையான இந்தியாவின் சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராஜர் கோவில். இங்கு தில்லை மரங்கள் பரந்துள்ள நிலப்பரப்பில் ஆடல் அரசர் அவதாரத்தில் சிவனுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அதனாலே அத் திருத்தலம் தில்லை நடராஜர் கோவில் என பெயர் பெற்றது.

இத்தலத்தின் கட்டடங்கள் கிட்டத்தட்ட 500 - 600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும். பெரும் பாராங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கும் எனவும் பல வருட உழைப்பில் கட்டப்பட்டிருக்கும் எனவும் கட்டடக்கலை வல்லுநர்கள் கூறியுள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கூட இந்த கோவில் எத்தனை ஆண்டு பழமையானது என கண்டுபிடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என சில குறிப்புகள் கூறுகின்றன. இன்னும் சிலர் 3500 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என கூறுகின்றனர்.

பல சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு பராந்தக சோழன் தங்க விமானமொன்றை பரிசாக வழங்கியுள்ளார் என குறிப்புகள் கூறுகின்றன.

இத்தலத்தில் பல சோழர்களின் கல்வெட்டுக்கள் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக சிவனின் நடராஜர் கோலம் இடது காலைத் தூக்கி வலது காலை பூமியில் வைத்ததாக அமையும். இந்த கோவிலிலுள்ள நடராஜ பெருமானின் வலது கால் பதிந்திருக்கும் தலம் பூமியின் மையப் பகுதியாகும் என பலர் கூறுகிறார்கள். ஆயினும் சிலர் ஏற்க மறுக்கின்றனர்.

கணிதம், நிலவியல், பொறியியல் போன்ற துறைகளுக்கு பல்கலைக்கழகம் இல்லாத காலத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான கோவிலை கட்டியது நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கிறது.

பஞ்சபூத தலங்களில் இந்த தலம் ஆகாயத்தைக் குறிப்பதாக அமைகிறது. அதனால் இங்கு உள்ள மூர்த்தியை ஆகாச லிங்கம் என அழைப்பர்.

இத்தலம் 4 வாசல் மற்றும் கோபுரங்களால் அமைந்துள்ளது. இவ்வாலயம் பற்றிய குறிப்புகள் 200 -300 வருடங்களுக்கு முன் அழிந்த நிலையில் தற்போது அறநிலையத்துறை இதனை பாதுகாத்து வருகிறது.

சென்று தரிசனம் காண முடியாவிட்டாலும் நம் மனதில் ஆகாச லிங்கத்தை நிறுத்தி வழிபட்டு அருள் பெறுவோமாக!

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd