web log free
November 22, 2024

 

வாழை இலைகளில் சாப்பிடுவதும், பெரும்பாலான விருந்துகளில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுவதையும் பார்த்து இருப்போம். அதே போன்ற தையல் இலைகளை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

தற்போதைய நெகிழி போன்ற என்னற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட விதவிதமான தட்டுகளுக்குப் பதிலாக, முன்பெல்லாம் தைக்கப்பட்ட இலையில் (தையல் இலை) தான் உணவுகளை இட்டு உண்ணவும், பொட்டலங்கள் கட்டவும் பயன்படுத்தப்படும்.

ஆல இலை, மந்தாரை இலை, முருக்கை இலை போன்ற இலைகளை மடிப்புகள் இல்லாமல் பக்குவம் செய்து முற்றிலும் உலர்ந்தபின் மெல்லிய ஈர்க்கால் வட்ட வடிவமாகத் தைத்து உபயோகித்து வந்தோம்.

இந்த இலைகள் திருவிழாக்கள் மற்றும் கோயில்களில் பாரம்பரியமாக வழங்கப்படும் உணவினை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் ஒரு குடிசைத் தொழிலாக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வேலையாகும்.

தற்போது தமிழகத்தில் உள்ள நெகிழி தடையால் பெரும்பாலான வீடுகளில் இந்த தையல் இலைகளை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

வாழை இலை போன்றவற்றை ஓரிரு நாட்கள் மட்டுமே வைத்து உபயோகிக்க கூடிய நிலையில், இந்த தையல் இலைகளை நீண்டகாலம் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

கடைகளில் சட்டினி, பஜ்ஜி, போண்டா, ஊறுகாய் விற்பனைக்கு வந்தபோது அதை சிறு சிறு பொட்டலங்களாக மந்தாரை இலைகளேயே உபயோகித்தனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தையல் இலைகளை சாப்பிட்டு தூக்கி எறிந்தால் கால்நடைகளுக்கு உணவாகவும். இல்லையெனில், சில நாட்களில் மண்ணோடு மக்கி காணாமல் போகும். நெகிழி பல ஆண்டுகள் ஆகியும் மக்காமல் அப்படியே கிடக்கும்.

இன்றைய இணையவழி மூலம் உணவு வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் இதை பின்பற்ற செய்யவேண்டும்.

எனவே இத்தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு தையல் இலைகளை பயன்படுத்துவதன் மூலம் குடிசைத்தொழிலை ஆதரித்து, நெகிழி பயன்பாட்டை தவிர்த்து இயற்கையை ஒத்து, நம் மண்ணின் வளத்தையும் காக்கலாம். தற்சார்பாக நமது வாழ்க்கையை நடத்திட பெரும்பங்காற்றும். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd