தமிழரின் அடையாளமாக இன்று வரை நாம் பார்ப்பது சோழர்களை தான். சோழர்கள் என்றவுடனே நமக்கு அவர்கள் கட்டுவித்த ஆலயங்கள் தான் நினைவிற்கு வரும்.
சோழர் படைப்பில் என்னற்ற கோவில்கள் இருக்கின்றன. அவற்றுள் பல சிறப்புவாய்ந்தவை.
அவ்வாறான கோவில்களில் ஒன்று தான் மிக தொண்மையான இந்தியாவின் சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராஜர் கோவில். இங்கு தில்லை மரங்கள் பரந்துள்ள நிலப்பரப்பில் ஆடல் அரசர் அவதாரத்தில் சிவனுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அதனாலே அத் திருத்தலம் தில்லை நடராஜர் கோவில் என பெயர் பெற்றது.
இத்தலத்தின் கட்டடங்கள் கிட்டத்தட்ட 500 - 600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும். பெரும் பாராங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கும் எனவும் பல வருட உழைப்பில் கட்டப்பட்டிருக்கும் எனவும் கட்டடக்கலை வல்லுநர்கள் கூறியுள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கூட இந்த கோவில் எத்தனை ஆண்டு பழமையானது என கண்டுபிடிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என சில குறிப்புகள் கூறுகின்றன. இன்னும் சிலர் 3500 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என கூறுகின்றனர்.
பல சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு பராந்தக சோழன் தங்க விமானமொன்றை பரிசாக வழங்கியுள்ளார் என குறிப்புகள் கூறுகின்றன.
இத்தலத்தில் பல சோழர்களின் கல்வெட்டுக்கள் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக சிவனின் நடராஜர் கோலம் இடது காலைத் தூக்கி வலது காலை பூமியில் வைத்ததாக அமையும். இந்த கோவிலிலுள்ள நடராஜ பெருமானின் வலது கால் பதிந்திருக்கும் தலம் பூமியின் மையப் பகுதியாகும் என பலர் கூறுகிறார்கள். ஆயினும் சிலர் ஏற்க மறுக்கின்றனர்.
கணிதம், நிலவியல், பொறியியல் போன்ற துறைகளுக்கு பல்கலைக்கழகம் இல்லாத காலத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான கோவிலை கட்டியது நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கிறது.
பஞ்சபூத தலங்களில் இந்த தலம் ஆகாயத்தைக் குறிப்பதாக அமைகிறது. அதனால் இங்கு உள்ள மூர்த்தியை ஆகாச லிங்கம் என அழைப்பர்.
இத்தலம் 4 வாசல் மற்றும் கோபுரங்களால் அமைந்துள்ளது. இவ்வாலயம் பற்றிய குறிப்புகள் 200 -300 வருடங்களுக்கு முன் அழிந்த நிலையில் தற்போது அறநிலையத்துறை இதனை பாதுகாத்து வருகிறது.
சென்று தரிசனம் காண முடியாவிட்டாலும் நம் மனதில் ஆகாச லிங்கத்தை நிறுத்தி வழிபட்டு அருள் பெறுவோமாக!