"குருந்தூர்மலை ஒரு வழிபாட்டிடம். அங்கு யாரும் சென்று வழிபடலாம்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருந்தூர்மலையில் வழிபடச் சென்ற தமிழ் மக்களுக்கு பிக்குகள், சிங்கள மக்கள் மற்றும் பொலிஸாரால் இடையூறு விளைவித்தனர்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "குருந்தூர்மலை விவகாரத்தை வைத்து ஒரு தரப்பினர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர். இன்னொரு தரப்பினர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றனர். இவையிரண்டும் தற்போதைய நிலைமையில் தேவையற்றவை.
குருந்தூர்மலை வழிபாட்டிடம். அங்கு எவரும் சென்று வழிபடலாம். இந்தநிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பது எமது கடமை. சம்பந்தப்பட்ட இரு தரப்பினருடனும் நாம் கலந்துரையாடித் தீர்வு பெற்றுக்கொடுப்போம்" என தெரிவித்துள்ளார்.
தனிச் சிங்களச் சட்டத்தைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய நிலையில், நாங்கள் ஒவ்வொருவரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை போன்று நிதானமான முறையில் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
யாழ். முற்றவெளியில் இன்று (15.07.2023) இடம்பெற்ற தொழில் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டில் வாழ்கின்ற அனைவரும் தங்களுடைய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அதேவேளை, இனம், மொழி, மதம், நிறம் போன்ற அனைத்து விடயங்களையும் கடந்து இலங்கையர்களாக சவால்களை எதிர்கொள்ளுகின்ற போதே, நாட்டின் எதிர்காலத்தினை வளமானதாக மாற்றியமைக்க முடியும்.
இந்த நிலையில், மொழியின் பெயரால் அரசியல்வாதிகள் சிலரினால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இந்நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் வெளியிடுகின்ற கருத்துக்கள் நிதானமானவையாக அமைய வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தும் கதையொன்றை தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, குறித்த விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிடுகின்ற கருத்துக்கள் மிகவும் நிதானமானவை எனவும் அவ்வாறான பக்குவமே இந்த நாட்டிற்கு அவசியம் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான், தான் இராஜினாமா செய்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமக்கு மீட்டுத் தருமாறு கோரி உச்ச நீதிமன்றத்தை நாடத் தீர்மானித்துள்ளார்.
அதன்படி தமக்கு மீண்டும் எம்.பி பதவியை வழங்குமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும், பிரதிவாதிகளாக நிதி அமைச்சர், தேர்தல்கள் ஆணைக்குழு, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பெயரிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததால் எம்பி பதவியை ராஜினாமா செய்ததாகவும், தன்னிடம் வேட்புமனு பணம் பெற்றதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும் தேர்தலில் போட்டியிட முன்வந்த அரசு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பதால் தனக்கு க்கு மீண்டும் எம்.பி பதவியை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதய அறுவை சிகிச்சைகளுக்காக 2,000 வரையிலான சிறுவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்தது.
வைத்தியசாலையின் இதய நோய் பிரிவின் மருத்துவ ஊழியர்கள் குழாம் நாளொன்றுக்கு 05 அறுவை சிகிச்சைகள் வீதம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக, அதன் பணிப்பாளர் வைத்தியர் G.விஜேசூரிய குறிப்பிட்டார்.
மருத்துவ ஊழியர்கள் குழாம் இதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், பௌதீக வளங்கள் பற்றாக்குறையினால் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாதுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கான தீர்வாக 11 மாடிகளைக் கொண்ட சிறுவர் இதய நோய் பிரிவொன்றை கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஆண்டு நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வைத்தியர் G.விஜேசூரிய குறிப்பிட்டார்.
நானுஓயா, மஹாஎலிய தோட்டத்தில், கோழியொன்று வித்தியாசமான முறையில் முட்டை இட்டுள்ளது.
K. கிருஷாந்தன் என்பவரே குறித்த கோழியை வளர்த்து வருகின்றார்.
இது தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஜப்பானிய அரசாங்கத்தின் கடனுதவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய களனி பாலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் 28 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும் ஆணிகளை போதைப்பொருள் பாவனையாளர்கள் களவாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் கான்கிரீட் மூடிகளை இரவு நேரத்தில் ரகசியமாக உடைத்து கான்கிரீட் கவர்கள் உள்ளே இருந்த காப்பர் கம்பிகள் அகற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும், கட்டுநாயக்கா - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள அதிவேக மின் கம்பிகளை கூட போதைப்பொருள் பாவனையாளர்கள் அறுத்துள்ளதாகவும், இதனால் அதிவேக நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் மின்விளக்குகளை ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அந்த சாலையில் உள்ள பாதுகாப்பு வலைகளை கூட இரும்புக்காக வெட்டி விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை (11) ஜனாதிபதி தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு சபையில் இது தெரியவந்துள்ளது.
இந்தப் பகுதியை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றுமாறு குழுவின் தலைவர் சரத் வீரசேகர பரிந்துரைத்துள்ளார். இந்த நிலைமையின் அடிப்படையில் புதிய களனி பாலம் மற்றும் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பாதுகாப்பை ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய களனி பாலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நவம்பர் 24, 2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.
கலபிட்டமட துனுமலையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கெப் வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சரத் வேரகொட என்ற நபரே உயிரிழந்துள்ளார். டி-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண காணொளிகளை இணையத்தில் பரப்பியதாக சந்தேகத்தின் பேரில் நேற்று (13) குருநாகல் பிரதான பாடசாலையின் 06 மாணவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது மகளின் நிர்வாண காணொளிகள் இணையத்தில் பரப்பப்பட்டதாக வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகத்திற்குரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் முதலாவது சந்தேகநபர் முறைப்பாட்டாளரின் மகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், மாணவியின் சம்மதத்துடன் எடுக்கப்பட்ட நிர்வாண வீடியோ காட்சிகள் சந்தேகநபரின் ஆப்பிள் கையடக்கத் தொலைபேசியில் பதியப்பட்டிருந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்தது.
வரக்காபொல பிரதேசத்தில் 6ஆம் சந்தேகநபரான மாணவியின் வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றதாகவும், அங்கும் மாணவர்கள் மது அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்போது, முதலில் சந்தேகப்படும் மாணவன் தனது காதலியிடம் கோபித்துக்கொண்டு, அதன்படி மாணவியின் நிர்வாண வீடியோக்களை இணையதளத்தில் தனது நண்பர்களுக்குப் பரப்பிவிட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய மாணவர்கள் இது தொடர்பான நிர்வாண காணொளிகளை இணையத்தில் பரப்பியதாக நீதிமன்றில் தெரிவித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கைது செய்யப்பட்ட மாணவர்கள் குருநாகல் பிரதான பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரும் சமூகத்தில் உள்ள முக்கிய குடும்பங்களின் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய 6 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு வருடங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் தந்தை ஒருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றில் 13 ஆம் திகதி 17 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம்.ஏ சஹாப்தீன், 2013 ஆம் ஆண்டு கிளிநொச்சி நகருக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து தனது பத்து வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு எதிராக இந்த சிறைத்தண்டனையை விதித்தார்.
இரண்டு வருடங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தமை குறித்து சிறுமியின் தாயார் கிளிநொச்சி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த பின்னர், சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களிலும் தந்தை குற்றவாளி என்று கண்டறியப்பட்டது, மேலும் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மேலும், பிரதிவாதிக்கு அரசு கட்டணமாக பத்தாயிரம் ரூபாய் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. சிறுமிக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடாக இரண்டு லட்சம் ரூபாய்.
பணத்தை செலுத்த தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனை அதிகரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடுகன்னாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்ட போது காணாமல் போனதாக கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (ஜூலை 10) முதல் நடைபயணத்தின் போது பெண் காணாமல் போனதை அடுத்து, காவல்துறை மற்றும் STF நேற்று தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தது.
டேனிஷ் பெண் மலையில் நடைபயணம் மேற்கொண்ட போது தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஜூன் 26 அன்று நாட்டிற்கு வந்த பெண் தனியாக சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் ஜூலை 10 ஆம் திகதி கண்டி பேக் பேக்கர்ஸ் விடுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
தான் உல்லாசமாக செல்வதாக விடுதி நிர்வாகத்திடம் கூறியதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு விடுதிக்கு திரும்பாத போது, நிர்வாகம் கண்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.