web log free
May 09, 2025
kumar

kumar

இடைக்கால அரசாங்கமொன்று உருவானாலும் தானே பிரதமர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தன்னை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என தெரிவித்துள்ள அவர் என்னுடனோ அல்லது அமைச்சர்களுடனோ பேச்சுவார்த்தைகளிற்கு வராதவரை அவர்கள் போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினால், புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குணவர்தனவுக்கு பிரதமர் பதவியைத் தவிர வேறு அமைச்சுப் பதவியும் வழங்கப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

அவர் தற்போது மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய அவைத் தலைவராகவும் உள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டை கட்சியில் இருந்து நீக்கபட்டுள்ளதாக அக் கட்சின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நேற்று கூடிய கட்சியின் உயர்பீடமே இந்த முடிவை மேற்கொண்டதாகவும் ,வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் கட்சியின் ஒழுக்கத்தை மீறியதற்காக நசீர் அஹமட்டை கட்சியில் இருந்து நீக்கபட்டுள்ளதாகவும் ,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டரீதியாக இதனை உறுதிப்படுத்தினால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது.
 
அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவாக்கு சதொச ஊடக பெற்றுக் கொள்ள முடியும் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
 
சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் கொள்வனது செய்ய முடியும்
 
ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் என வர்த்தக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நடிகை குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ள நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கி உள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை, ஆனால் கையில் சுற்றிய ஊசியுடன் புகைப்படம் எடுத்து அதை டுவிட்டரில் பதிவுசெய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.

நாட்டில் அதிக பிரபலம் வாய்ந்த அரசுத் தலைவர் ஒருவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இந்த பிரமுகர் உயிரிழந்துள்ளதாக நேற்றிரவு முதல் பரவி வரும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தேடுதலில் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்பது உறுதியானது.

குறித்த பிரமுகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று அவரது பேச்சாளர் கூறினார்.

 

இலங்கையில் 'ஒரே நாடு. ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவரான அஸீஸ் நிஸாருத்தீன் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

ரம்புக்கண பிரதேசத்தில் போலீஸ் அராஜகமாக நடந்து கொண்டமைக்கு எதிர்ப்பினை வெளியிடும் வகையிலும், நாட்டில் எழுச்சி பெற்றுள்ள மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்..

தனது விலகலை அறிவிக்கும் கடிதத்தை - அவர் நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

விலகல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?

நாட்டு மக்கள் இன, மத மற்றும் கட்சி பேதங்களை மறந்து, தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி வீதிகளில் இறங்கி போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த அவல நிலைக்கு காரணம் அரசாங்கத்தின் தூர நோக்கற்ற செயல்பாடுகள்தான் எனவும், தனது விலகல் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது துன்பங்களை, துயரங்களை, சீற்றங்களை ஜனநாயக ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாக மக்கள் முன்னெடுத்து வரும் நிலையில், அவற்றினை அடக்கி ஒடுக்குவதற்கு போலீசார் மிகவும் கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாகவும் தனது கடிதத்தில் நிஸாருத்தீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளுக்காக போராடும் அப்பாவி மக்கள் மீதான மனிதநேயமற்ற அடக்குமுறைச் செயற்பாடுகள், தேசிய மட்டத்தில் பெரும் கொந்தளிப்பையும், சா்வதேச மட்டத்தில் இலங்கைக்கு மேலும் அவப்பெயரையும் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

'ரம்புக்கணயில் நடந்த மக்கள் போராட்டத்தில், ஒருவரின் உயிரை பலியெடுத்தும் பலரை காயப்படுத்தியும் போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலானது, மனித உரிமையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குரியதாக்கி உள்ளது' எனத் தெரிவித்துள்ள அவர் ரம்புக்கண படுகொலைக்கு காரணமானவா்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள விலகல் கடிதத்தில் கூறியுள்ளார்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணி மீது முஸ்லிம் சமூகம் மிகவும் அதிருப்தியுற்றிருந்த நிலையில்கூட, ஜனாதிபதி தனக்கு வழங்கிய நியமனத்துக்கு மதிப்பளித்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தான் செயலாற்றி வந்ததாகக் குறிப்பிடும் நிஸாருத்தீன், 'இந்நாட்டு அப்பாவி மக்கள் படும் அவஸ்தைகளையும், அவா்கள் மீது தொடுக்கப்படுகின்ற மனித உரிமை மீறல்களையும், அநீதிகளையும் பார்த்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் உறுப்பினராக தொடர்ந்து செயற்பட தன்னால் முடியாது எனவும் தனது கடிதத்தில் அஸீஸ் நிஸாருத்தீன் தெரிவித்துள்ளார்.

ஏன் இப்போது விலகல்?

மிரிஹான பிரதேசத்திலுள்ள ஜனாதிபதியின் வீடு, பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட மறுதினம் - தான் ராஜிநாமா செய்வதற்கு தீர்மானித்ததாகவும், தனது மகனுடைய சிகிச்சைக்காக இந்தியா சென்றமையினால் அப்போது ராஜிநாமா செய்ய முடியாமல் போய்விட்டதாகவும் கூறினார்.

மிரிஹானயிலுள்ள ஜனாதிபதியின் வீடு முற்றுகையிடப்பட்ட மறுநாள், ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையொன்றில், அந்தத் தாக்குதலின் பின்னணியில் முஸ்லிம்கள் இருந்தமை போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கும் வகையிலான சொற்பிரயோகங்கள் இருந்ததாகவும், இதனையடுத்து ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியிலிருந்து தான் விலகுவதற்கு தீர்மானித்ததாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டவர்கள் அரபு வசந்தத்தை ஏற்படுத்தப் போவதாக கோஷமிட்டதாகவும், அவர்கள் தீவிரவாதிகள் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அஸீஸ் நிஸாருத்தீன் சுட்டிக்காட்டினார்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் 13 அங்கத்தவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மூவர் முஸ்லிம்கள், மூவர் தமிழர்கள். ஏனையோர் சிங்களவர்களாவர்.

சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு கலகொட ஞானசார தேரர், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டுமென முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினரான டளஸ் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பிரதமரும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

ஒரு சிறிய அமைச்சரவையை உள்ளடக்கிய புதிய ‘சர்வ கட்சி’ அரசாங்கம் நிறுவப்பட வேண்டும். 

புதிய அமைச்சரவையானது சகல கட்சிகளையும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சர்வகட்சி அமைச்சரவையானது தேசிய நிகழ்ச்சி நிரலில் கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனம் அதிகரித்த 12.5 Kg எரிவாயுவின் விலை உயர்வை அரசு நிராகரித்துள்ளது. இன்றுநள்ளிரவு முதல் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் முன்பு எரிவாயு விலை ரூ.5,175 ஆக உயரும் என்று அறிவித்திருந்தது. எனினும் தற்போது வழமையான விலையிலேயே விற்பனையாகும்.

நிதியமைச்சர் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்திய பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதுவரையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிப்பது அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சாத்தியமான நிதிதிட்டத்தை முன்வைக்கும்வரை சர்வதேச நாணயநிதியத்தினால் இலங்கைக்கான துரித நிதி உதவியை வழங்க முடியாது என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கான தீர்வுகளை பிரதமரும் ஜனாதிபதியும் நாடாளுமன்றத்திற்கும் மக்களிற்கும் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

113 பெரும்பான்மையுடன் அரசாங்கத்தினால் இந்த நெருக்கடிக்கு தீர்வை காணமுடியாது என தெரிவித்துள்ள அவர் 1977 ம் ஆண்டுடன் நிலைமையை ஒப்பிட்டுள்ளதுடன் 175 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில்லாமல் அரசாங்கத்தினால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd