web log free
July 21, 2025
kumar

kumar

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்குகளை இதுவரை செலுத்தாத வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக வழங்கப்பட்ட சந்தர்ப்பம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இன்று(12) காலை 8.30 முதல் பிற்பகல் 4.30 வரை தத்தமது மாவட்ட செயலக அலுவலகத்தில் தபால் மூல வாக்குகளை செலுத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக இதற்கு முன்னர் கடந்த 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கு 736,589 அரச உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

இதனிடையே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கையினால் இன்றும் மாவட்ட செயலகங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு வாழ் மலையக மக்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.

இச்சந்திப்பானது, கொழும்பு விவேகானந்த சபை, மேட்டு தெரு கொழும்பு 13 இல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (11) காலை கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

சுயாதீன அரச வழக்கறிஞர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மாத்திரமன்றி சட்டத்தின் ஆட்சியை ஸ்தாபிப்பதாக சஜித் இங்கு மீண்டும் வாக்குறுதியளித்தார்.

 

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 20 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாக்களிப்பு மத்திய நிலையமாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் செப்டெம்பர் 19 ஆம் திகதி பாடசாலை நேரத்தின் பின்னர் தேவைக்கேற்ப கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கெண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் உரிய காலப்பகுதிக்குள் மாத்திரம் மூடப்படுமென கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரச சேவை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அரசு அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வரவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் பணியை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

சில சமயங்களில் அரசு அதிகாரிகள் தமக்கு தெரிவிக்காமல் பணிக்கு வராத காரணத்தால் வெளியேறும் அறிவிப்புகளை வெளியிட ஓராண்டுக்கு மேல் ஆகிறது.

எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுச்சேவை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

ஒரு அதிகாரிக்கு ராஜினாமா நோட்டீஸ் வழங்கப்பட்டால், அது சம்பந்தமாக ஒரு சாக்கு சொல்லப்பட்டால், அது பொது சேவை ஆணைக்குழு நடைமுறை விதிகளின் பிரிவு 216 இன் விதிகளின்படி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும், பதவியை விட்டு விலகுவதற்கான அறிவிப்பு தொடர்பில் அதிகாரியொருவர் சமர்ப்பித்த சாக்குப்போக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒழுக்காற்று அதிகாரி வழங்கிய தீர்மானத்தை எழுத்து மூலம் அந்த அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1350 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில்,மீதி 350 ரூபாயும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்களுக்கும் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும்,இன்று முதல் 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேம்பியன்  மேல் பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய தனது பாடசாலை வயது மகளை துஷ்பிரயோகம் செய்த 44 வயதுடைய தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தாயார் கொழும்பில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருவதாகவும், விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது மகள் தாயிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

பொகவந்தலா பொலிஸில் தாய் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகத்தின் பேரில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாடசாலை மாணவியை டிக்ஓயா வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களில் பதிவுகளைப் பகிரும் போது கவனமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இழிவுபடுத்தும் பதிவுகள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், பல்வேறு போலி கணக்குகள் ஊடாக பதிவிடப்படும் அத்தகைய பதிவுகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் தேர்தல் சட்டத்தின் கீழ் நீங்கள் குற்றவாளியாக இனங்காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அனைத்தும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடம் இதுவரையில் ஒரு இலட்சம் கோடி ரூபா சுங்க வருமானம் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் சுங்கத் திணைக்களத்தை சந்திக்க முடியும் எனவும் சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்கு நோக்கி பயணித்து இருப்பதாக அவர் கூறினார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்லில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காது. மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு விலகிச் செல்லுமாறு ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் பெயருக்கு இருந்து கொண்டு, தேர்தல் பணிகளை குழப்பி வந்த நான்கு அமைச்சர், பிரதியமைச்சர்களை பதவி விலக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு பலர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காது உள்ளே இருந்து செயல்படுவோரை உடனடியாக வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்காமல் மக்களுக்கான பணிகளுக்கு சிலர் முட்டுக்கட்டையாக இருந்த நிலையில் பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நால்வரை ஜனாதிபதி நேற்று பதவி நீக்கியிருந்தார்.

இந்த நிலையில், பதவி நீக்கப்பட்ட நால்வர் உள்ளிட்ட சிலர் இணைந்து மொட்டுக் கட்சி அலுவலகத்தில் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தத் தயாராகி வருவதாக அந்தக் கட்சித் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd