web log free
April 19, 2024

ஆச்சியை குளிப்பாட்டி வன்புணர்ந்தவர் கைது

 உலகம் எங்கேயோ போய் கொண்டிருக்கின்றது என பலரும் கூறுவதை கேள்விபட்டிருக்கின்றோம். ஆனால், நம் நாட்டில் இடம்பெறும் சில சம்பவங்களை பார்த்தால், சீரழிவுயை நோக்கி போகிறது என்றுதான் கூறவேண்டும்.

அன்றிரவு 12 மணியிருக்கும், பக்கத்து வீட்டில் யாரும் இல்லாதபோது, மிகவும் இலாவகமாக வீட்டுக்குள் நுழைத்த 31 வயதான ஒருவர், கட்டிலில் படுத்திருந்த 68 வயதான ஆச்சியை செங்குத்தாக தூக்கிக்கொண்டு அந்த வீட்டின் குளியலறைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இரவு என்றோ, கடுங்கூதல் என்றோ பார்க்காமல், குளிர்ந்த நீரில் அந்த ஆச்சியை குளிப்பாட்டியுள்ளார்.

ஒன்றுக்கு இரண்டு மூன்று தடவைகள் குளிப்பாட்டியுள்ளார்.

அதன்பின்னர், கட்டிலுக்கு தூக்கிச் சென்று அவன், தனக்கு வேண்டி வகையில், மிகவும் கொடூரமான முறையில் அந்த ஆச்சியை வன்புணர்ந்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டான்.

இந்த சம்பவம், கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெட்கேதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பக்கத்து வீட்டில் அன்றையதினம் ஆச்சியை தவிர வேறு எவருமே இல்லை என்பதை, நன்றாக அறிந்துகொண்டதன் பின்னரே, நடு சாமத்தில் இவ்வாறு வன்புணர்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு சென்றதன் பின்னர், பக்கத்து வீட்டிலிருந்த திருமணம் முடிக்காத 31 வயதானவர் கைதுசெய்யப்பட்ட கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஷிரந்தி விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட அந்த ஆச்சி, நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார்.

பிள்ளைகள் நால்வரும் திருமணம் முடித்து, தனி,தனி குடித்தம் நடத்துகின்றனர்.

அதிலொரு பிள்ளையின் மனைவி (மருமகள்) ஆச்சியுடன் அந்த வீட்டிலேயே வசிந்துவந்துள்ளார். அவ்வாறு வசித்துவந்தவர், மிக அவசரமான தேவைக்காக, நாவலப்பிட்டியவிலுள்ள தன்னுடைய சொந்த வீட்டுக்கு அன்று செல்லவேண்டி ஏற்பட்டது.

திரும்புவதற்கு நேரமின்மையால் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டார்.

அதனை நன்கு அறிந்துகொண்ட பக்கத்துவீட்டுக்காரன், ஆச்சியின் வீட்டுகுள் நுழைந்து, ஆச்சியை அச்சுறுத்தி, செங்கூத்தாக தூக்கிக்கொண்டுபோய் குளிப்பாட்டி இவ்வாறு வன்புணர்ந்துள்ளார்.

ஆச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சந்தேகநபர் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Last modified on Thursday, 05 September 2019 03:00