web log free
December 27, 2024

‘பேரனின் தகவலினால் வட்டவளை ஆச்சியின் சடலம் மீட்பு’

அம்மானா சும்மா இல்லடா, அவ இல்லன்னா யாரும் இல்லடா, என்றொரு பாடல் இருக்கிறது. 

ஆனால், தன்னுடைய 81 வயதான தாயை நாற்காலியில் கட்டிவைத்து, மூக்கு, கண்களில் இரத்தம் வரும் வரையில் தாக்கி, இறந்த பின்னர், உரப்பையொன்றில் கட்டி, கிணற்றில் போட்டு, நாடகமாடிய, அந்தத் தாயின் ஒரேயொரு மகன், கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை ரொசெல்ல தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

அந்த தோட்டத்தில் திருமணம் முடித்திருக்கும் சந்தேகநபருக்கு, ஆண் பிள்ளையொன்றும் உள்ளது.

தன்னுடைய தாய், வள்ளியம்பா ரங்காய் (வயது 81)  என்பவரை அடித்து கொலை செய்துள்ளார்.

அவருடைய சடலம், அட்டன் நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சஞ்ஜீவ பொன்சேகாவின் முன்னிலையில், இன்று (13) கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.  

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 

கடந்த 9 ஆம் திகதி,அதாவது திங்கட்கிழமை,

தன்னுடைய தாய், வீட்டிலேயே இறந்துவிட்டார் எனக் கூறி, அவருடைய ஒரேயொரு மகன், அந்த தாயின் இறுதி கிரியை நடத்துவதற்கு போதுமான பண வசதி இன்மையால், அவருடைய சடலத்தை காட்டுக்குள் எடுத்துச் சென்றுவிட்டார் என, அவருடைய மருமகள் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த வட்டவளை பொலிஸார், 

மரணமடைந்த வள்ளியம்மையின் இளைய பேரனான 8 வதான சிறுவனிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அந்த சிறுவன், நடந்த விடயங்களை அப்படியே கக்கிவிட்டார். 

அந்த சிறுவன் தன்னுடைய வாக்குமூலத்தில், 

ஆச்சியின் மகன், என்னுடைய அம்மா மற்றும் எனது அண்ணன் , கம்பினால் என்னுடைய ஆச்சை அடித்தனர்.

வீட்டிலிருந்த நாற்காலியில் கட்டிவைத்தே அடித்தனர். 

ஆச்சி அழுதார், வாயில் துணியை வைத்தனர்.

ஆச்சியின் கண்கள், மூக்கில் இரத்தம் வடிந்தது.

அதன்பின்னர், உரப்பையொன்றில் ஆச்சியை போட்டு கட்டிய அப்பா, அந்த உரப்பையை எங்கோ எடுத்துச் சென்றுவிட்டார். 

பேரனின் வாக்குமூலத்தின் பின்னர், அந்த தாயின் ஒரேயொரு மகன் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், 

சடலத்தில், வீட்டுத்தோட்டத்தில் கைவிடப்பட்ட கிணற்றில் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

சடலத்தை மீட்பதற்காக சந்தேகநபர், வீட்டுத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சடலம், அட்டன் நீதிமன்ற பதில் நீதவான், டிக்கோயா வைத்தியசாலையில் நீதிமன்ற வைத்தியர் கலன லொக்குகே முன்னிலையில் மீட்கப்பட்டது.

அதன்பின்னர், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துசெல்லப்பட்டது. 

இது படுகொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் விசாரணைகளின்பின்னர் உறுதிப்படுத்தப்படும் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். 

அந்த தாயின் சடலம், பழைய துணிகளினால் சுற்றப்பட்டு, உரப்பையில் போட்டு, பயன்படுத்தப்படாத கிணற்றில் போடப்பட்டது. 

சடலம் மேலேயே உப்பி வந்துவிடாத வகையில், பாரிய கற்களும் அதன் மீது வைக்கப்பட்டிருந்தன என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். 

சடலத்தை மீட்டெடுத்தபோது அங்கு வருகைதந்திருந்த அந்த தோட்டத்தை சேர்ந்த பெருந்திரளான மக்கள், 

கைதுசெய்யப்பட்டுள்ள அந்த தாயின் மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு முயற்சித்தனர்.

எனினும், பொலிஸாரும் இன்னும் சிலரும் இணைந்து அதனை தடுத்துவிட்டனர். 

கோபமடைந்திருந்த அந்த மக்களிடமிருந்து அந்த மூவரையும் கடும் பாதுகாப்புக்கு மத்தியில், அவ்விடத்திலிருந்து பொலிஸார் அழைத்துச்  சென்றுவிட்டனர். 

சம்பவத்தை அடுத்து இளைய பேரன், கடும் பாதுகாப்பு மத்தியில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

Last modified on Saturday, 14 September 2019 06:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd