web log free
December 27, 2024

உடலுறவின்போது இறந்ததற்கு இழப்பீட்டு உத்தரவு

அலுவலக பயணத்தின்போது அறிமுகம் இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அலுவலர் இறந்ததற்கு அந்த நிறுவனமே பொறுப்பேற்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரான்ஸ் நிறுவனத்துக்கே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவருடைய மரணம் ஒரு தொழிற்சாலை விபத்து என்று கூறி, இறந்த ஊழியருடைய குடும்பத்தினருக்கு நஷ்டஈடு பெறும் உரிமை உள்ளது என்று பாரிஸ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

இறந்த ஊழியருடன் உடலுறவு கொண்ட பெண் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு தங்கள் அலுவலர் சென்றபோது, அவர் அலுவல் காரணத்துக்காக செல்லவில்லை என்று அந்த நிறுவனம் வாதிட்டது.

ஆனால், அலுவலக பயணம் மேற்கொண்டிருக்கும் காலத்தில் எந்த விபத்தில் சிக்கினாலும் அதற்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பது பிரான்ஸ் சட்டம் என்று நீதிபதிகள் கூறினர்.

சேவியர் எக்ஸ் என்ற அந்த அலுவலர் டி.எஸ்.ஓ. என்ற பாரிஸைச் சேர்ந்த ரயில்வே சேவைகள் நிறுவனத்தில் பொறியியலாளராக பணியாற்றி வந்தார்.

2013இல் மத்திய பிரான்ஸ் பகுதிக்கு அலுவலக பயணம் சென்றிருந்தபோது, ஒரு விடுதியில் அவர் மரணம் அடைந்தார்.

“முற்றிலும் அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டதால்” ஏற்பட்ட சம்பவம் என்று அவருடைய நிறுவனம் கூறியது.

பணியிட விபத்தாக கருதி அவருடைய குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அரசு சுகாதாரக் காப்பீட்டு நிறுவனம் அளித்த முடிவை எதிர்த்து அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. உடலுறவு செயல்பாடு என்பது இயல்பானது, “குளிப்பது அல்லது உணவு சாப்பிடுவதைப் போன்றது” என்று காப்பீட்டு நிறுவனம் கூறியது.

Last modified on Tuesday, 17 September 2019 02:03
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd