web log free
December 27, 2024

ரணிலின் “டயர்” கோட்பாடு

ரணில் விக்கிரமசிங்க, தான் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை பிரச்சினைகளை மிகவும் இலாவகமாக கையாண்டு அதற்குத் தீர்வு கண்டுவிடுவார்.

அது அவரது சிறிய காலத்திலிருந்தே வந்த பழக்கவழக்கமாகும்.

ரணில், கொழும்பு றோயல் கல்லூரியிலேயே கல்விப்பயின்று வந்தார். 

கல்லூரிக்கு மிகவும் அருகாமையில், 5ஆவது ஒழுங்கையிலேயே அவர் வசித்துவந்தார். 

கல்லூரிக்கு நடந்தே சென்றுவிடலாம். 

எனினும், ஒருபோதும் நடந்தே சென்றதே இல்லை. 

காரிலேயே பயணிப்பார்.

ரணில் காரில் கல்லூரிக்கு வருவது, சில மாணவர்களுக்கு பிடிக்கவில்லை. கோபமடைந்தனர்.

அவர்கள் ஒருநாள், ரணிலின் காரில் ஒரு டயரை வெட்டிவிட்டனர்.

எனினும், ரணில் அடுத்த நாளும் காரிலேயே சென்றார்.

அடுத்தநாளும் டயரை வெட்டிவிட்டனர். மறுநாளும் வெட்டிவிட்டனர்.

இப்படியாக, இரண்டு,மூன்று தடவைகள் அல்ல. 10 தடவைகள் வெட்டிவிட்டனர்.

அந்த 10 தடவைகளும் ரணில் விக்கிரமசிங்க காரிலேயே கல்லூரிக்குச் சென்றார். 

11 ஆவது நாளாகவும், காரிலேயே ரணில் விக்கிரமசிங்க கல்லூரிக்குச் சென்றார்.

அதன்பின்னர் எவருமே, ரணில் காரின் டயரை வெட்டுவதே இல்லை.

ரணில் விக்கிரமசிங்க பல தசாப்தங்களாக இவ்வாறுதான் தனக்கெதிரான அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்.

இறுதி டயர் வெட்டப்படும் வரையிலும், தன்னுடைய பயணத்தை சளைக்காது முன்னெடுத்துச் செல்வார். 

சிங்கள ஊடகமொன்றிலேயே இந்த தகவல் வெளியானது. படமும் பிரசுரமாகியிருந்தது. சிரித்துக்கொண்டே இருப்பவர் தான் ரணில் விக்கிரமசிங்க

Last modified on Tuesday, 17 September 2019 15:44
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd