web log free
February 05, 2025

பெல்கனியில் பெண்கள் இப்படியா போஸ் கொடுப்பது

துபாயிலுள்ள கட்டடமொன்றின் பெல்கனியில் நிர்வாணமாக போஸ்கொடுத்த பெண்கள் பலர் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயின் மெரினா ஆடம்பர குடியிருப்புப் பகுதியிலுள்ள உயர்ந்த கட்டடமொன்றின் மேல் தளத்திலுள்ள பெல்கனியில் மேற்படி பெண்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தனர்.

இக்காட்சிகளை அருகிலுள்ள மற்றொரு கட்டடத்திலிருந்த ஒருவர் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இப்பெண்கள் குழுவினர் "பப்ளிசிட்டி ஸ்டன்டுக்காக" இவ்வாறு செய்தனர் என தி நெஷனல் பத்திரிகை தெரிவித்துள்ளது.

எனினும், இக்குழுவினரின் நடத்தை ஏற்றுக்கொள்ளப்பட முடியாது எனவும் இந்த நடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சமூகத்தின் நெறிமுறைகளை பிரதிபலிக்கவில்லை என துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தண்டனைக் கோவையின்படி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்ளும் குற்றத்துக்கு 06 மாத சிறைத்தண்டனை மற்றும் 5000 திர்ஹாம் (2.7 இலட்சம் இலங்கை ரூபா) அபராதம் விதிக்கப்படலாம் எனவும் துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd