இரு உயிர் ஒன்றாகி
அன்போடு உறவாகி
காதலெனும் படகு கொண்டு
வாழ்கையெனும் ஆற்றை கடக்கும்
உன்னதமிக்க உணர்வு காதல்.....
காதலுக்குள் காமமுண்டு
சினுங்கிடும் சண்டைகளுண்டு - மேலாக
உண்மையான புரிதலுமுண்டு...
ஜாதிமத பேதமில்லை
ஏழைஎளியவர் பாகுபாடில்லை
முக அழகு அவசியமில்லை
ஒரு மனதை மட்டும் நேசிக்கத்தெரிந்தால்....
காதலுக்கு
வெற்றி என்பதும்
தோல்வி என்பதும்
நேசிக்கும் இரு இதயங்கள் சார்ந்தது...
ஒருவரை மட்டும் இறுதிவரை காதலிக்கும்
ஆடவனும் பெண்மணியும்
காதலின் அடையாலங்கள்
அது தோல்வியடைந்தாலும்
அவருள் உயிரோட்டமாய் வாழும்.....
காதலெனும் உயிரோட்டத்தை
தவறாக பயன்படுத்தும் சிலரின் பார்வைக்காக
இந்த வரிகள்...