web log free
December 22, 2024

மலச்சிக்கலுக்கு ஒரே தீர்வு

மனிதனுக்கு வரக்கூடாத இரண்டுள் ஒன்று மனச்சிக்கல் மற்றையது மலச்சிக்கல். இவை இரண்டில் எது வந்தாலும் நம்மால் தாங்கவே முடியாது.

மலச்சிக்கலுக்கு ஒரே தீர்வு முற்கால தமிழர்கள் பயன்படுத்திய கழிவறைகள் மட்டுமே. 

2ம் உலக மகா யுத்தத்தில் பல நாடுகளை உலுக்கிய சர்வாதிகாரி ஹிட்லரே மலச்சிக்கலால் அவதிப்பட்டுள்ளார். 

இன்று நாம் பயன்படுத்தும் மேலைநாட்டு கழிவறைகளின் வரலாறு என்ன தெரியுமா? மேலைநாட்டு மக்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே மலம் கழிக்கும் வழக்கத்தை கொண்டவர்கள். எது ஏனென்றால் அவர்களின் உணவில் சத்துக்கள் அதிகம் எனவே உணவுகள் அதிகம் ஜீரணிக்கப்பட்டு குறைந்தளவில் கழிவறைகள் வெளியேற்றப்படும். மேலைநாட்டு மக்களின் உணவு முறையும் வாழ்க்கை முறையும் வேறு எனவே அந்த கழிவறைகள் அவர்களுக்கு பொருத்தமானது. ஆனால் நம் உணவு முறைக்கு இது பொருந்தாது. நமக்கு முக்கியமான உணவு அரிசி. அரிசியில் கழிவுகள் அதிகம் ஆகவே தினமும் இரு முறை கூட மலம் கழிக்க நேரிடும்.

இந்த மேலைநாட்டு கழிவறைகள் உடல் நலம் குன்றிய மற்றும் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருப்போருக்காக வடிவமைக்கப்பட்டது.ஆனால் இப்போது அது பணக்காரர்களின் பழக்கமாக மாறிவிட்டது. 

குதிகால் படும்படி அமர்தல் தான் மனிதனின் இயற்கையான நிலை. தாயின் கருவறையில் எவ்வாறு அமர்ந்திருப்போமோஅதே முறையில் கழிவறையில் அமர்வது தான் உடலிற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

குத்த வைத்து உட்காருதல் இப்போது கேலியாக இருந்தாலும் அக்காலத்தில் அது ஆசனமாகவே பார்க்கப்பட்டது.

கடந்த 15 வருடங்களாக வயிறு சார்ந்த பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. முக்கியமாக மலச்சிக்கல் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மேலைநாட்டு கழிவறைகள் தான். இயற்கையாக வரும் கழிவுகளை நாம் தடுக்கிறோம். நாம் என்று இயற்கைக்கு புறம்பாக நடக்கின்றோமோ என்று நாம் பிரச்சினைகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

நம் தமிழர் கழிவறைகள் நம்மை தினமும் நமக்கே தெரியாமல் ஆசனம் ஒன்றை செய்ய வைக்கிறது. அது மலாசனம் என்று அழைக்கப்படும். இதன் போது உடல் உறுதியாகும், வயிறு, முதுகு வலுவடையும். மூளை திறம்பட வேலை செய்யும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இனியாவது நம் முன்னோர்களின் கலாச்சாரத்தை கேலி செய்வதை நிறுத்தி விட்டு அதனை கடைபிடிக்க பழகுவோம்

Last modified on Saturday, 16 October 2021 11:17
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd