web log free
December 22, 2024

பப்பாளிப்பழத்தில் வைட்டமின் எ,பி,சி, ரிபோஃப்ளோவின், கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

பப்பாளிப்பழம் அனைத்து காலங்களிலும் மிக எளிதாக கிடைக்கக்கூடிய பழம். பப்பாளி பழமானது மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கக்கூடியது.
  
செரிமானம் சார்ந்த பிரச்சனைகளான அஜீரணம், நெஞ்செரிச்சல் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் இந்த பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
  
பப்பாளிப்பழத்தில் செரிமானத்திற்கு தேவையான அதிகபடியான நார்சத்துகளும் ப ர்ப்பேன் என்று சொல்லக்கூடிய ஒரு வகை என்சைம் அடங்கியள்ளது. இது சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆவதற்கு உதவி செய்வதோடு செரிமானம் சார்ந்த பிரச்சனைகளையும் மிக எளிதாக குணமாக்கும்.
  
பப்பாளிப்பழத்தில் கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார் சத்துக்களும், இருதய துடிப்பை சீராக்க கூடிய பொட்டாசியம் சத்தும் நல்ல அளவில் இருக்கிறது.
  
உடலில் உள்ள நரம்புகள் இறுக்கத்தன்மை ஏற்ப்படாமல் இருக்க பொட்டாசியம் பப்பாளியில் உள்ள பொட்டாசியம் பயன்படுகிறது. ஆகவே தொடர்ந்து பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வரும்போது இருதயத்தில் கொழுப்புகள் படிவதையும் தடுக்கும்.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd