web log free
October 01, 2023

ஆப்கானிஸ்தானில் 14 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நடந்த தாக்குதலில் 14 தலீபான் பயங்கரவாதிகள் பலியானார்கள்.

காந்தஹார் அருகே அமைந்துள்ள போல்டாக் நிகா பொலிஸ் பாதுகாப்பு சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்துவதற்கு தலீபான் பயங்கரவாதிகள் நேற்று அதிகாலையில் முற்றுகையிட்டனர்.

பொலிஸார் நடத்திய எதிர் தாக்குதலில் சோதனைச்சாவடி தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதன்போது, 14 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்தனர். மேலும் 7 தலீபான் பயங்கரவாதிகளும், 4 பொலிஸ் அதிகாரிகளும் படுகாயம் அடைந்தனர்.