web log free
February 25, 2026

ஆப்கான் குண்டுவெடிப்பில் 5 சிறுவர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடுமையான தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்குள்ள ஹெராத் மாகாணம், ஒபே மாவட்ட நிர்வாக அலுவலகத்தின் அருகே நேற்று மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

இந்தக் குண்டுவெடிப்பில் 5 குழந்தைகள் பலியானதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd