web log free
April 24, 2024

பிரதமர் மெர்க்கலின் கட்சிக்குக் குறைவான ஆதரவு

 

ஐரோப்பிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வாக்களித்தோர் எண்ணிக்கை, 2014ஆம் ஆண்டைவிட கூடியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவீதத்தினர் இம்முறை வாக்களித்துள்ளனர். சென்ற தேர்தலில் அந்த எண்ணிக்கை 43 சதவீதமாக இருந்தது.

ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் 28. ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், போலந்து உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இம்முறை அதிகமானோர் வாக்களித்திருக்கின்றனர்.

ஜெர்மனியைப் பொறுத்தவரை பசுமைக் கட்சி முன்னிலை வகிப்பதாக வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் கூறுவதுடன், பிரதமர் ஏங்கெலா மெர்க்கலின் கட்சிக்கு 2014ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவான ஆதரவே கிட்டியுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 751 இடங்களுக்கான பொதுத் தேர்தலில் 400 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

21 நாடுகளில் நேற்று வாக்களிப்பு இடம்பெற்றது. எஞ்சியவை வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளன.