web log free
February 25, 2026

மாமன்னர் சுல்தான் ஐந்தாம் முகமது அரியணையைத் துறந்தார்

மலேசிய மாமன்னர் சுல்தான் ஐந்தாம் முகமது தம்முடைய பதவியிலிருந்து விலகிவிட்டார். இன்றிலிருந்து அது நடைமுறைக்கு வருவதாக மலேசிய தேசிய அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

49 வயது சுல்தான் ஐந்தாம் முகமது 2016 டிசம்பரில் மலேசியாவின் பதினைந்தாவது மாமன்னராக நியமிக்கப்பட்டார்.

மலேசியாவின் தனித்துவமான சுழற்சி முறையின் அடிப்படையில், ஒன்பது அரச குடும்பங்களைச் சேர்ந்தோர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாமன்னராக நியமிக்கப்படுவர்.

சுல்தான் ஐந்தாம் முகமது அண்மையில் ரஷ்ய அழகியை மணந்து கொண்டதாக நவம்பரில் வெளியான இணையத் தகவல்கள் கூறின.

இவ்வாரத் தொடக்கத்தில் அவர் பதவி விலகப் போவதாக இணையத்தில் வதந்திகள் நிலவின.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd