web log free
October 14, 2025

மாயமான விமானம் தொடர்பில் தகவல் அளித்தால் சன்மானம்

மாயமான விமானம் தொடர்பில் தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3ஆம் திகதி 13 பேருடன் அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்ட ½ மணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது.

இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.மீட்பு பணிகள் நேற்று 6ஆவது நாளை எட்டிய போதும், மாயமான விமானம் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.

எனவே தேடும் பணிகளில் கூடுதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இதற்கிடையில் மயமான விமானம் தொடர்பாக தகவல்களை அளிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என இந்திய விமான படையின் ஏர் மார்ஷல் ஆர்.டி. மாத்தூர் அறிவித்துள்ளார்.

Last modified on Sunday, 09 June 2019 05:53
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd