web log free
June 07, 2023

ராணுவத்திற்கு உளவு பார்க்க கடல் உயிரினங்கள்

அமெரிக்கத் தற்காப்பு ஆய்வு நிறுவனம், ராணுவத்தின் உளவு திறனை மேம்படுத்த கடல்
உயிரினங்களின் உதவியை நாடியுள்ளது.

பெரிய மீன்கள் முதல், ஓர் உயிரணு கொண்ட உயிரினங்கள் வரை அந்த முயற்சியில்
ஈடுபடுத்தப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடலடியிலிருந்து சமிக்ஞை எழுப்பி எச்சரிக்கை விடுக்க அவை பயன்படுத்தப்படும் என்றும்,
கடலடி வாகனங்கள் குறித்த விவரங்களை அத்தகைய உயிரினங்கள் எவ்வாறு
வழங்குகின்றன என்பதை புதிய முயற்சி ஆராயும் என்றும் கூறப்படுகின்றது.

கடலடியில் வாகனங்களின் நடமாட்டத்தை உணரும்போது, அந்த உயிரினங்கள் வெவ்வேறு
வகையில் செயல்படும் என தெரிவிக்கப்படுவதுடன், அச்சுறுத்தலை உணரும் சில
உயிரினங்கள், அவற்றின் உடலிலிருந்து ஒளியை வெளியிடும் என்று தகவல்
வெளியாகியுள்ளது.