web log free
June 07, 2023

வன்முறையாக மாறிய ஆர்ப்பாட்டம்

ஹொங்கொங்கில் பெரிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக உருவெடுத்ததை அடுத்து, அதில் கலந்துகொண்டவர்களைக் கலைக்க, அதிகாரிகள் தடியடி நடத்தியுள்ளனர்.

ஹொங்கொங்கில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியில் கூடியவர்களைக் கலைக்க மிளகுத் தெளிப்பானும் பயன்படுத்தப்பட்டது.

குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வரையப்பட்டுள்ள மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்க, ஹொங்கொங்கில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியில் மக்கள் பெருந்திளாகக் கூடினர்.

நாளை மறுநாள் அந்த மசோதா தொடர்பில், நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் அதுவரை அங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.