web log free
June 07, 2023

கடும் மழை - 5 பேர் உயிரிழப்பு

சீனாவின் மத்திய, தென் பகுதிகளில் கடும் மழையால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்தது நான்கு நாட்களுக்கு கடும் மழை தொடரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஜியாங்சு (Jiangxi) மாநிலத்தில் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவிலான விளைச்சலும் நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இதனால், 1.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 382 மில்லியன் டொலருக்குப் பொருளாதாரச் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.