web log free
March 31, 2026

ஹொங்கொங்கில் அரசாங்க அலுவலகங்கள் பூட்டு

ஹொங்கொங்கில் வன்முறைமிக்க கலவரங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

ஒரு சில குற்றச்சாட்டுகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சீனாவுக்கு வழக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படுவதை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து, அங்கு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டனர்.

வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரைக் கலைக்க கண்ணீர் புகை, ரப்பர் தோட்டாக்கள், மிளகு புகை போன்றவற்றைக் காவல்துறை பயன்படுத்தியது.

இந்த நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 72 பேர் வைத்தியசாலையில சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd