நியூசிலாந்து நிலநடுக்கம் 7.4 ரிச்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தை அடுத்து, விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
நியூசிலாந்து நாட்டின் கெர்மடெக் தீவு பகுதியில் அந்நாட்டின் நேரப்படி காலை 9 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
அத்துடன், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த தீவு பகுதிகளான கெர்ம்டெக் பகுதியை சேர்ந்த ஆக்லாந்து மற்றும் டோங்கா ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்த, சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டபோதும், பின்னர் அது வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.