web log free
May 20, 2026

கடும் வெயில் - ஒரே நாளில் 30 பேர் பலி

பீகார் மாநிலத்தில் கடும் வெயிலை தாங்க முடியாமல் ஒரே நாளில் 30 பேர் பலியாகியுள்ளமை அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வட மாநிலங்களில் கடுமையான வெயில் தாக்கம் உள்ளது.

இந்நிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுக்கு நேற்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 30 பேர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்ததுடன், மேலும் 10 பேர் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சதார் மருத்துவமனை டாக்டர் சுரேந்திரகுமார் சிங் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd