web log free
November 24, 2024

முன்னாள் ஜனாதிபதி மயங்கி விழுந்து மரணம்

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட முகமது மோர்சி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

முகமது மோர்சி (வயது 67) ஜனாதிபதியாக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அந்நாட்டு ராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது.

ஜனாதிபதி மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் மோர்சி திங்கட்கிழமை ஆஜரானார்.

கண்ணாடி கூண்டுக்குள் இருந்த பேசிய அவர் தம்மிடம் பல ரகசியங்கள் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் எகிப்து நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது திடீரென நீதிமன்றத்திலேலே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்தார்.

மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், முகமது மோர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd