web log free
June 07, 2026

அமெரிக்கா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

ரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்திய பகுதிக்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், உடனடியாக பதில் எதுவும் கூற முடியாது என்று அமெரிக்க ராணுவம் கருத்து கூற மறுத்து விட்டது.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதுடன், ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.

ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது. அண்மையில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று அமெரிக்காவும், ஈரான் அமெரிக்கா மீதும் பரஸ்பரம் குற்றம் சாட்டியிருந்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd