அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகை தருகிறார். இந்த பயணத்தின் போது, இந்திய வெளிவிவகார செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்து பேச உள்ளார்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவில் சில கசப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்து வந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வரும் 28- 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுவது கவனிக்கத்தக்கது.