web log free
June 07, 2023

மல்யுத்தமாக மாறிய விவாத நிகழ்ச்சி

பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நேரலையாக நடந்த விவாத நிகழ்ச்சி மல்யுத்தமாக மாறிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் - இ- இன்சாப் கட்சி நிர்வாகி மசூர் அலி சியால், கராச்சி பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் இம்தியாஸ் கான் இடையே ஏற்பட்ட விவாதம், கைகலப்பில் முடிந்துள்ளது.

அங்கிருந்த ஊழியர்கள் சண்டையை விலக்க சத்தமிட்டுள்ளதுடன், நேரலை விவாத நிகழ்ச்சி குத்துசண்டையாக மாறிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.