ஹொங்கொங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டாளர்கள் முக்கிய வீதிகளை முற்றுகையிட்டுள்ளனர்.
பிரிட்டன் காலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஹொங்கொங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
அதனை முன்னிட்டு இன்று (ஜூலை 1) பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மைய வாரங்களில், ஹொங்கொங்கில் சில வகைக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவோரை வழக்கு விசாரணைக்காகச் சீனாவுக்கு அனுப்பி வைப்பதை அனுமதிக்கும் மசோதா குறித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இளம் ஆர்ப்பாட்டாளர்கள் வீதிகளை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.