web log free
January 07, 2026

நன்கொடைப் பெட்டியில் சிக்கி பெண் மரணம்

கனடாவில் துணிகளைப் போடும் நன்கொடைப் பெட்டியில் சிக்கி பெண் மரணமடைந்தார்.

BBC தகவல்கள்படி, கனடாவில் இத்தகைய மரணம் நேர்ந்தது இது முதல்முறை அல்ல.

நன்கொடைப் பெட்டிகளில் உள்ள பொருட்களை யாரும் திருடாமலிருக்க அவற்றில் பற்களைப் போன்ற கூரிய பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொருட்களைத் திருட முயற்சி செய்பவர்கள் மட்டுமல்லாமல் அவற்றை நன்கொடையாக வழங்க முயற்சி செய்பவர்களும் அவற்றில் சிக்கிக்கொள்கிறார்கள்.

2015இலிருந்து அவ்வாறு 7 கனடியர்கள் மாண்டதாக The Canadian Press தெரிவித்தது.

பெட்டிகளை அகற்றுமாறு சில நகரங்களும் இலாப நோக்கமற்ற அமைப்புகளும் கேட்டுக்கொண்டுள்ளன.

பெட்டிகளின் பாதுகாப்புக் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd