பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்களிப்பில் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் 19 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
மேயின் அரசாங்கத்துக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிர்த்து 306 வாக்குகளும் பதிவாயின.
ஒரு நாள் முன்புவரை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான பிரதமர் மேயின் திட்டங்களுக்கு, கன்சர்வேட்டிவ் கட்சி, ஜனநாயக யூனியன் கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
ஆனால் நேற்று நடந்த வாக்களிப்பில், மே பிரதமராகத் தொடர்வதற்கு அவர்கள் ஆதரவு தந்தனர்.
வாக்களிப்பில் மேயின் வெற்றிக்கு அது முக்கியக் காரணமாக அமைந்தது.
வாக்களிப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பில் தனித்தனியே சந்தித்துப் பேச்சு நடத்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்குத் மே அழைப்புவிடுத்தார்.