web log free
February 25, 2026

வெள்ளைக்கொடியுடன் வருமாறு பாகிஸ்தானுக்கு நிபந்தனை

பாக்கிஸ்தான் இராணுவம் வெள்ளைக்கொடியுடன் வர வேண்டும் என இந்திய இராணுவம் நிபந்தனை விதித்துள்ளது.

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற போது, பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை எடுத்து செல்ல இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது குறித்து பாகிஸ்தான் இதுவரை பதிலளிக்கவில்லை

காஷ்மீர் மாநிலம் கெரான் செ்டார் பகுதியில், பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஊடுருவ முயன்றனர். அவர்களை திரும்பி செல்லும்படி, இந்திய இராணுவம் எச்சரிக்கை விடுத்தது.

இதனை அவர்கள் கண்டுகொள்ளாததால், இந்திய இராணுவம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்திய இராணுவ வீரர்கள், தவறுதலாக, இந்திய எல்லையை தாண்டினால், அவர்களை கொன்று, உடலை சிதைப்பதை பாகிஸ்தான் வழக்கமாக வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd