web log free
September 16, 2024

இளவரசர் ஃபிலீப் கார் விபத்துக்குள்ளானது

எலிசெபெத் அரசியாரின் கணவர், இளவரசர் ஃபிலீப் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர் காயம் ஏதுமின்றித் தப்பியுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த மற்ற இருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் சாண்டிரிங்ஹாம் (Sandringham) பகுதிக்கு அருகில் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

Range Rover ரக வாகனத்தை இளவரசர் பிலிப் ஓட்டிச் சென்றதாகவும், மற்றொரு வாகனத்துடன் மோதியதில் அவரின் வாகனம் கவிழ்ந்ததாகவும் கூறப்பட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து 97-வயது இளவரசர் பிலிப் பதற்றம் அடைந்ததாகவும், அவரைக் காரிலிருந்து வெளியேற்ற உதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.